36 வயதினிலே | |
---|---|
இயக்கம் | ரோசன் ஆண்ட்ரூஸ் |
தயாரிப்பு | சூர்யா |
இசை | சந்தோஷ் நாராயணன் |
நடிப்பு | ஜோதிகா ரகுமான் அபிராமி நாசர் |
ஒளிப்பதிவு | ஆர். திவாகரன் |
படத்தொகுப்பு | மகேசு நாராயணன் |
வெளியீடு | 15 மே 2015 |
ஓட்டம் | 115 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 3 கோடி (US$470,000 ) |
36 வயதினிலே (36 Vayadhinile) ரோசன் ஆண்ட்ரூஸ் இயக்கத்திலும், சூர்யா, தயாரிப்பிலும் வெளியாகியுள்ள தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் ஜோதிகா, ரகுமான், அபிராமி, நாசர்ஆகியோர் முன்னணி கதைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் சந்தோஷ் நாராயணனின் இசையிலும், ஆர். திவாகரனின் படத்தொகுப்பிலும் வெளியான தமிழ்த்திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. முக்கியமாக ஜோதிகாவின் நடிப்பில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இறுதியில் அவர் 63 ஆவது பிலிம்பேர் விருதுகள் தென்னிந்திய மற்றும் 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். இவருடன் இணைந்து, 2015 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் இப்படம் ஏழு விருதுகளை வென்றது.[1][2]
குடும்பத்தின் பொருட்டு தன் கனவுகளையும் அடையாளத்தையும் இழந்துவிடும் மகளிர், குடும்ப வட்டத்தில் பொறியில் சிக்கியது போன்ற வாழ்விற்கு தள்ளப்படுகிறார்கள். குடும்பத்துக்காகவே பலவற்றையும் இழக்கிறார்கள்.[3] தன்னை இழந்து கணவன் குழந்தை என குடும்பத்துக்காக வாழும் ஒரு பெண். அவள் தன் குழந்தையாலும், கணவனாலும் ஒதுக்கி வைக்கப்படும் ஒரு நிலை. இச்சூழலில் அவள் எப்படி தன்னை அறிந்து, உணர்ந்து ஒரு பெரும் மதிப்பைப் அடைகிறாள் என்பதே இத்திரைப்படத்தின் கதை.[4] கல்லூரியில் படிக்கும் காலத்தில் எதையும் எதிர்கொண்டு எதிர்த்துப் போராடுகிற பெண், ஒரு நிலையில் தன்னை இழந்துவிட்டதை நன்கு உணரும் அவள் தன் 36ஆம் அகவையில் தன்னைக் மீளவும் காண்கிறாள்.
இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் அனைத்துப்பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.