60 வயது மாநிறம்

60 வயது மாநிறம்
இயக்கம்ராதா மோகன்
தயாரிப்புஎஸ். தாணு
கதைராதா மோகன்
மூலக்கதைகோதி பண்ணா சாதாரண மைகட்டு
திரைக்கதைராதா மோகன்
இசைஇளையராஜா
நடிப்புவிக்ரம் பிரபு
பிரகாஷ் ராஜ்
இந்துஜா
சமுத்திரக்கனி
ஒளிப்பதிவுவிவேக் ஆனந்த்
படத்தொகுப்புடி. எசு. ஜெய்
கலையகம்வி கிரியேசன்சு
வெளியீடு31 ஆகத்து 2018 (2018-08-31)
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

60 வயது மாநிறம் (60 Vayadu Maaniram) 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதன் எழுத்தும் இயக்கமும் ராதா மோகன் ஆவார்.[1] 2016 இல் வெளியான, வருவாயில் வெற்றிப்படமான "கோதி பண்ணா சாதாரண மைகட்டு" என்ற கன்னடத் திரைப்படத்தின் மறுவாக்கமாகும் இத்திரைப்படம்.[2] இப்படத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், இந்துஜா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[3] படத்தயாரிப்பாளரும் வினியோகஸ்தருமான எஸ். தாணு தனது வி கிரியேசன்சு நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார்.[4]

இப் படத்திற்கு இசை அமைத்தவர் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா.[5] இப் படத்தின் ஒளிப்பதிவை மனுஷ் நந்தனும், படத்தொகுப்பை டி. எஸ். ஜெய்யும், கலை இயக்கத்தை கே. கதிரும் செய்துள்ளனர்.

கதை

[தொகு]

இத் திரைப்படம் ஆல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்ட 60 வயது கோவிந்தராஜன் (பிரகாஷ் ராஜ்), என்பவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் பற்றிச் சொல்கிறது. ஒருநாள், கோவிந்தராஜன் திடீரென்று காணாமல் போகிறார். அவரது மகன் சிவா (விக்ரம் பிரபு), அவரைக் காணாமல் வருத்தமடைகிறான். பெண் மருத்துவர் (இந்துஜா) உதவியுடன் தன் தந்தையத் தேடுகிறான். ஆனால் கோவிந்தராஜன் ஒரு கொலையைச் செய்த ரங்காவுடன் (சமுத்திரக்கனி), இருக்கிறார். சிவா தனது தந்தையை கண்டுபிடித்தானா? இல்லையா? என்பது மீதிக் கதையாகிறது.[6]

நடிப்பு

[தொகு]
  • விக்ரம் பிரபு - சிவா கோவிந்தராஜன்
  • பிரகாஷ் ராஜ் - கோவிந்தராஜன்
  • இந்துஜா ரவிச்சந்திரன் -மருத்துவர் அர்ச்சனா
  • சமுத்திரக்கனி - ரங்கா
  • பரத் ரெட்டி - காவற்துறை அதிகாரி பத்ரி
  • இளங்கோ குமரவேல் - ராஜப்பன்
  • ஜாங்ஜிரி மதுமிதா - ஜானகி ராஜப்பன் (ஜானு)
  • மோகன் ராமன் - பாலச்சந்திரன் (பாலு)
  • மீனா வெமுரி -அர்ச்சனாவின் தாயார்
  • டாடி சரவணன் - காவல் ஆய்வாளர் எஸ். தங்கராஜ்
  • ராகவன் - எஸ் ஐ ரகுநாத்
  • ராதா ராமகிருஷ்ணன் - மரியா
  • சரத் - காசி
  • அருள் டி. சங்கர் - குணா
  • அனு கிருஷ்ணா - பாரு

தயாரிப்பு

[தொகு]

2016இல் வெளிவந்த கன்னட வெற்றிப் படமான "கோதி பண்ணா சாதாரண மைகட்டு" வின் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் மறு ஆக்கம் செய்யும் உரிமையை திரு.பிரகாஷ் ராஜ் வாங்கினார்.[7][8] இதன் தயாரிப்பு வேலைகள் 2016ம் ஆண்டின் இறுதியில் துவங்கியது. இது ராதா மோகனின் முதல் மறுஆக்கப் படமாகும்.[9]

இப் படத்தின் முன்னோட்டம் ஆகஸ்டு 14, 2018இல் வெளியிடப்பட்டு மக்களிடையே நேர்மறையான வரவேற்பை பெற்றது.[10][11][12]

இசை

[தொகு]

இப் படத்திற்கு இசை அமைத்தவர் இளையராஜா; பாடல்களை பா. விஜய், பழனி பாரதி மற்றும் விவேக் எழுதியுள்ளனர்.

  • இரவினைத் தேடி - இளையராஜா
  • தேடித் தேடி - பென்னி தயாள், விபாவரி
  • நாளும் நாளும் - மோனாலி தாகூர், பென்னி தயாள்

வரவேற்பு

[தொகு]

"தி டைம்ஸ் ஆஃப் இந்தியா" "பத்திரிகையில், அன்புடையவர்களின் செயலை காணாதவர்களுக்கும், பாசப் பிணைப்பால் உருகும் கதைகளை பார்க்க விரும்புபவர்களுக்கும் இத்திரைப்படம் ஒரு விருந்தாக அமையும்" என விமர்சித்தது.[13] "ஃபர்ஸ்ட்போஸ்ட்" பத்திரிகை 60 வயது மாநிறம் புதுமையான கருப்பொருளுடன், அனைவரும் விரும்பும் கதாபாத்திரங்களுடன் நன்றாக இருக்கிறது என விமர்சித்தது.[14] பிகைண்ட்வுட்ஸ்" தனது விமர்சனத்தில் "சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்திற்கு மேலும் சிறப்பாக திரைக்கதை, வசனங்களை அமைத்திருக்கலாம்" என்று கூறியுள்ளது.[15] அதிகப்படியான உணர்ச்சிகளுடன் கூடிய சராசரி திரைப்படம் என்று "இந்தியா டுடே" விமர்சனம் செய்தது.[16]"டெகான் குரோனிக்கிள்" இப்படம் மிக நேர்த்தியாக சொல்ல விரும்பும் கருத்துகளை அழகான முறையில் எடுத்துக்காட்டியுள்ளது எனவும், ஒளிப்பதிவும், இசையும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன எனவும் விமர்சனம் செய்தது.[17]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Prakash Raj and Vikram Prabhu team up for ‘60 Vayadu Maaniram’ - Times of India". The Times of India. https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/prakash-raj-and-vikram-prabhu-team-up-for-60-vayadu-maaniram/articleshow/65224596.cms. 
  2. "Vikram Prabhu, Prakash Raj in Godhi Banna Sadharana Mykattu’s Tamil remake - Times of India". The Times of India. https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/vikram-prabhu-prakash-raj-in-godhi-banna-sadharana-mykattus-tamil-remake/articleshow/65228804.cms. 
  3. "60 Vayadu Maaniram (Aka) 60 Vayadhu Maaniram review". 31 August 2018. Archived from the original on 13 January 2019. பார்க்கப்பட்ட நாள் 6 January 2019.
  4. "கிழக்கு சீமையிலே படத்துக்கு பிறகு நான் பெருமை கொள்ளும் படைப்பு : தயாரிப்பாளர் தாணு– News18 Tamil". News18 Tamil. 7 August 2018. Archived from the original on 16 August 2018. பார்க்கப்பட்ட நாள் 15 August 2018.
  5. "இளையராஜா இசையமைத்துள்ள '60 வயது மாநிறம்': டிரெய்லர் வெளியீடு!". Dinamani. Archived from the original on 15 August 2018. பார்க்கப்பட்ட நாள் 15 August 2018.
  6. Khalilullah.S (2018-08-14). "`நம்ம ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு வெள்ள நாய், கறுப்பு நாய் இருக்கும்!’ - `60 வயது மாநிறம்’ படத்தின் ட்ரெய்லர் | `60 vayadu maaniram’ movie trailer released" (in ta). vikatan.com. https://www.vikatan.com/news/cinema/133996-60-vayadu-maaniram-movie-trailer-released.html. 
  7. "Godhi Banna Sadharna Mykattu to be made in Tamil and Telugu - Times of India". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 15 August 2018.
  8. "Amitabh Bachchan & Prakash Raj To Come Together For GBSM Remake?". filmibeat.com. 15 July 2016. பார்க்கப்பட்ட நாள் 15 August 2018.
  9. "‘It Was A Privilege To Work With Ilaiyaraaja’: Radha Mohan On ‘Arubadhu Vayadhu Maaniram’" (in en-US). Silverscreen.in. 2018-07-31. https://silverscreen.in/tamil/news/radha-mohan-prakash-raj-ilaiyaraaja-arubadhu-vayadhu-maaniram/. 
  10. "Vikram Prabhu's '60 Vayadu Maaniram' trailer - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vikram-prabhus-60-vayadu-maaniram-trailer/articleshow/65412329.cms. 
  11. Aaglave, Ganesh. "60 Vayadu Maaniram trailer: Prakash Raj and Vikram Prabhu's class act make this thriller drama an interesting watch" (in en-US). http://www.bollywoodlife.com/news-gossip/60-vayadu-maaniram-trailer-prakash-raj-and-vikram-prabhus-class-act-make-this-thriller-drama-an-interesting-watch/. 
  12. "’60 Vayadhu Maaniram’ Trailer: Prakash Raj Reprises The Role Of The Brilliant Anant Nag" (in en-US). Silverscreen.in. 2018-08-15. https://silverscreen.in/tamil/news/60-vayadhu-maaniram-trailer-prakash-raj-reprises-the-role-of-the-brilliant-anant-nag/. 
  13. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/60-vayadu-maaniram/movie-review/65622174.cms
  14. https://www.firstpost.com/entertainment/60-vayathu-maaniram-movie-review-prakash-raj-vikram-prabhu-in-a-heart-warming-film-with-stellar-performances-5089401.html
  15. https://www.behindwoods.com/tamil-movies/60-vayadu-maaniram/60-vayadu-maaniram-review.html
  16. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/60-vayadu-maaniram-review-average-drama-with-overdose-of-emotions-1328643-2018-08-31
  17. https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/020918/60-vayadu-maaniram-movie-review.html

வெளி இணைப்புகள்

[தொகு]