ஃபிரேசர் நிறுவனம் என்பது ஒரு கனடிய மதியுரையகம். இது திறந்த சந்தை, சுதந்திரவாத கொள்கைகளுக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடுகிறது. அறிக்கைகள் கருத்துரைகள் வெளியிடுவது, அரசியலில் கொள்கைகளை வகுப்பது, அரச திட்டங்களை அலகுகளை மதிப்பீடு செய்வது போன்ற செயற்பாடுகளில் இது ஈடுபடுகிறது. இந்த நிறுவனம் கட்சி சார்பற்றதாக கூறினாலும், கனடிய பழமைவாத கட்சிக்கு ஆதரவான போக்கு உடையது. இக்கட்சி சார்ந்த பலர் இந்த நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளார்கள்.[1][2][3]
↑Schultze, Rainer-Olaf; Sturm, Roland; Eberle, Dagmar (2003-02-28). Conservative Parties and Right-Wing Politics in North America: Reaping the Benefits of an Ideological Victory?. VS Verlag für Sozialwissenschaften. ISBN978-3-8100-3812-8.