ஃபேரர் சாலை தொடருந்து நிலையம்

ஃபேரர் சாலை தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்தியப் பகுதியில் ஃபேரர் சாலை பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வட்டப்பாதை வழித்தடத்தில் இது பத்தொன்பதாவது தொடருந்துநிலையமாகும். இது ஹாலந்து வில்லேஜ் தொடருந்து நிலையம் மற்றும் பூ மலை தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் டோபி காட் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "FINALISED NAMES FOR CIRCLE LINE (CCL) STAGES 4&5 STATIONS". www.lta.gov.sg. Archived from the original on 18 December 2006.
  2. Ee Wen Wei, Jamie (25 May 2008). "Circle Line work causes cave-in off Holland Road". AsiaOne. https://www.asiaone.com/News/The%2BStraits%2BTimes/Story/A1Story20080525-66889.html. 
  3. "Here are the most annoying station names on the Singapore MRT network | CityMetric". www.citymetric.com. பார்க்கப்பட்ட நாள் 11 December 2018.