அருணாசலம் அரவிந்தகுமார் | |
---|---|
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2020 | |
தொகுதி | பதுளை மாவட்டம் |
பதவியில் ஆகத்து 2015 – மார்ச் 2020 | |
தொகுதி | பதுளை மாவட்டம் |
ஊவா மாகாணசபை உறுப்பினர் | |
பதவியில் 2004–2014 | |
தொகுதி | பதுளை மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 நவம்பர் 1954 |
தேசியம் | இலங்கையர், மலையகத் தமிழர் |
அரசியல் கட்சி | மலையக மக்கள் முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ் முற்போக்குக் கூட்டணி |
வாழிடம்(s) | பதுலுப்பிட்டி வீதி, பதுளை |
வேலை | அரசியல்வாதி |
அருணாசலம் அரவிந்தகுமார் (பிறப்பு: 17 நவம்பர் 1954)[1] இலங்கையின் மலையக அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் பொருளாளரும் ஆவார்.
அரவிந்தகுமார் கம்பளை புனித யோசேப்பு கல்லூரியிலும், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[2]
அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினராவார். அக்கட்சியின் நிதிச்செயலாளராகப் பணியாற்றினார்.[3][4] 2015 சூன் மாதத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உபதலைவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டார்.[5]
இவர் 2004 மாகாணசபைத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு 5,059 வாக்குகள் பெற்று ஊவா மாகாணசபையின் உறுப்பினராக 2004 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார்.[6] 2009 மாகாணசபைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7]
2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[8][9] 2015 தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு 53,741 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10][11][12][13]
2020 தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு 45,491 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[14][15]
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|---|
2004 மாகாணசபை[6] | பதுளை மாவட்டம் | மமமு | மமமு | 5,059 | தெரிவானார் |
2009 மாகாணசபை[7] | பதுளை மாவட்டம் | மமமு | மமமு | 7,863 | தெரிவானார் |
2010 நாடாளுமன்றம் | பதுளை மாவட்டம் | மமமு | மமமு | தெரிவு செய்யப்படவில்லை | |
2015 நாடாளுமன்றம்[16] | பதுளை மாவட்டம் | மமமு | ஐதேக | 53,741 | தெரிவானார் |
2020 நாடாளுமன்றம் | பதுளை மாவட்டம் | மமமு | ஐதேக | 45,491 | தெரிவானார் |