அ. கணேசமூர்த்தி

அ. கணேசமூர்த்தி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
2019-2024
முன்னையவர்எஸ். செல்வகுமார சின்னையன்
தொகுதிஈரோடு
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
2009-2014
பின்னவர்எஸ். செல்வகுமார சின்னையன்
தொகுதிஈரோடு
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
1998-1999
முன்னையவர்ச. கு. கார்வேந்தன்
பின்னவர்பழனியப்ப கவுண்டர் குமாரசாமி
தொகுதிபழனி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1989-1991
முன்னையவர்எஸ். பாலகிருஷ்ணன்
பின்னவர்கவிநிலவு தர்மராஜ்
தொகுதிமொடக்குறிச்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சூன் 1947 (1947-06-10) (அகவை 77)
உலகபுரம், ஈரோடு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு28 மார்ச்சு 2024(2024-03-28) (அகவை 76)
கோயம்புத்தூர், தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்பாலமணி (இறப்பு)
பிள்ளைகள்2
பெற்றோர்அவினாசி கவுண்டர்
சாராதாம்பாள்[1]
வாழிடம்(s)குமாரவலசு, சென்னிமலை ஒன்றியம், பெருந்துறை வட்டம், ஈரோடு, தமிழ்நாடு
வேலைவிவசாயம்
அரசியல்வாதி
மூலம்: [1]

அ. கணேசமூர்த்தி (A. Ganeshamurthi, 10 சூன் 1947-28 மார்ச்சு 2024) ஒரு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். மறுமலர்ச்சி திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் அக்கட்சியின் பொருளாளராக பதவி வகித்தார். 1978-இல் திமுக மாணவரணி பொறுப்பில் இருந்த இவர் பின்னர் ஒருங்கிணைந்த பெரியார் (ஈரோடு) மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பு வகித்தார். 1993-இல் திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவித்து வெளியேறிய ஒன்பது மாவட்ட செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர். மறுமலர்ச்சி திமுக தொடங்கியதிலிருந்து ஈரோடு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த இவர் 2016 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திமுக பொருளாளராக ஆனார். இவர் 1998 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பழனி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் 2009, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியிலிருந்து ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் 2009 பொதுத் தேர்தலில் மதிமுக சார்பாக வென்ற ஒரே வேட்பாளரும் இவரே.[3]

போட்டியிட்ட தேர்தல்களும் முடிவுகளும்

[தொகு]

மொத்தம் 25 பேர் தேர்தலில் போட்டியிட்ட 15வது ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில், காங்கிரசு கட்சியை சார்ந்த ஈ.வே.கி.ச. இளங்கோவனை 49,336 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து, ஈரோடு மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வுபெற்றார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியிலிருந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

ஆண்டு தொகுதியின் பெயர் மக்களவை / சட்டமன்றம் முடிவு
1989 மொடக்குறிச்சி சட்டமன்றம் வெற்றி
1998 பழனி மக்களவைத் தொகுதி மக்களவை வெற்றி
2006 வெள்ளக்கோயில் (சட்டமன்றத் தொகுதி) சட்டமன்றம் தோல்வி
2009 ஈரோடு மக்களவைத் தொகுதி மக்களவை வெற்றி
2014 ஈரோடு மக்களவைத் தொகுதி மக்களவை தோல்வி
2019 ஈரோடு மக்களவைத் தொகுதி மக்களவை வெற்றி

இறப்பு

[தொகு]

உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த அ. கணேசமூர்த்தி சிகிச்சைப் பலனின்றி 28 மார்ச்சு 2024 அன்று அதிகாலை உயிரிழந்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி.. யார் இவர்?". ஒன்இந்தியா (மார்ச் 16, 2019)
  2. "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.
  3. "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.
  4. "ஈரோடு: திமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வெற்றி". தினத்தந்தி (மே 23, 2019)
  5. https://www.dinamalar.com/news/tamil-nadu-news/erode-madhyamuk-mp-ganesh-murthy-dies--/3586889