அ. ர. அஞ்சான் உம்மா | |
---|---|
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் (தேசிய பட்டியல்) | |
பதவியில் 2000–2001 | |
கம்பகா மாவட்டத்தின், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2001–2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 செப்டம்பர் 1955 |
அரசியல் கட்சி | தேசிய சுதந்திர முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | ஆசிரியர் |
அப்துல் ரகுமான் அஞ்சான் உம்மா (Abdul Rahman Anjan Umma, பிறப்பு: 6 செப்டம்பர், 1955) என்பவர் இலங்கை அரசியல்வாதியும், ஆசிரியையும் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு, இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பின்னர் 2008 ஆம் ஆண்டு சூன் மாதம் அக்கட்சியில் இருந்து விலகி, மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்தார்.[2] பிறகு சிறிது காலம் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, தேசிய சுதந்திர முன்னணியில் சேர்ந்தார். பின்பு 31 அக்டோபர் 2012 ஆம் ஆண்டு, அப்போதைய எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் உறுப்பினரானார்.[3]