ஏ. வின்சென்ட் A. Vincent | |
---|---|
பிறப்பு | கோழிக்கோடு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா | 14 சூன் 1928
இறப்பு | 25 பெப்ரவரி 2015 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 86)
பணி | ஒளிப்பதிவாளர், திரைப்பட இயக்குநர் |
பிள்ளைகள் | ஜயனன் வின்சென்ட், அஜயன் வின்சென்ட் |
அலோய்சியசு வின்சென்ட் (Aloysius Vincent, 14 சூன் 1928 – 25 பெப்ரவரி 2015) 1960ஆம் ஆண்டு முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றியவர். கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் பிறந்த, இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சிறீதருடன் பல சிறப்பானப் படங்களில் பணி புரிந்துள்ளார். 1974ஆம் ஆண்டில் வெளியான பிரேம்நகர் என்ற தெலுங்கு படத்திற்காக பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவரது கடைசி மலையாளத் திரைப்படமாக 1985இல் வெளியான முப்பரிமாணத் திரைப்படமான பவுர்ணமி இராவில் அமைந்தது.[1] 2003ஆம் ஆண்டில் இந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் (ISC) இவருக்கு கே. கே. மகசன், வி.கே.மூர்த்தியுடன் கௌரவ அங்கத்துவம் வழங்கியது.[2]
உடல் நலக்குறைவால் 25 பிப்ரவரி 2015 அன்று தனது 86ஆவது அகவையில் சென்னையில் காலமானார்.[3]
இயக்கிய திரைப்படங்கள்
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)