அரும்பிகள் (Gemmules) என்பவை கடற்பஞ்சுகளில் காணப்படும் மொட்டுகள் ஆகும். கடற்பஞ்சுகள் அசாதாரண சூழலில் கலவியற்ற இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. கலவியற்ற இனப்பெருக்கத்தின் போது அசாதாரணமாக இனப்பெருக்கம் ஆகி இளம் உயிரிகள் உற்பத்தியாகின்றன.[1]
கடற்பஞ்சுகளில் பாலிலா இனப்பெருக்க முறையில் மொட்டு விடுகின்றன. இந்த மொட்டுகள் வெளிப்புறத்திலோ அல்லது உட்புறத்திலோ தோன்றும். உள் மொட்டுகள் ஜெம்யுல்கள் எனப்படும்.[2] இருவகை மொட்டுகளும் வளர்ச்சி அடைந்து கடற்பஞ்சுகளாக உருவாகின்றன.[3]
ஆக்ஸிஜன் இல்லை என்றாலும் குளிா்ந்த சூழல் இருந்தாலும், உலா்ந்த நிலை இருந்தாலும் உயிா் வாழும் அகமொட்டுகள் பாக்டீரியாவின் என்டோஸ் போர்களை ஒத்து காணப்படும். அகமொட்டுகளைச் சுற்றிலும் அமீபாசைட்டால் ஆனது. மேலும் அதனைச் சுற்றிலும் ஸ்பிக்குள்கள் (நுண்சட்டங்கள்) காணப்படும். வாழும் சூழல் இல்லாவிடிலும் அகமொட்டுகள் முதிா்ச்சி அடைந்த நிலையில் வாழும், வளரும்.