அகத்தியமலை புதர் தவளை

அகத்தியமலை புதர் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ராகோபோரிடே
பேரினம்:
ரோர்செசுடசு
இனம்:
ரோ. அகச்தெயென்சிசு
இருசொற் பெயரீடு
ரோர்செசுடசு அகச்தெயென்சிசு
சக்காரியா மற்றும் பலர், 2011

அகத்தியமலை புதர் தவளை் (Raorchestes agasthyaensis-ரோர்செசுடசு அகச்தெயென்சிசு) என்பது இந்தியாவின் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், குறிப்பாக பொன்முடி மலைக்கு அருகிலுள்ள போனாக்காடு மற்றும் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களின் அருகிலுள்ள பகுதிகளில் காணப்படும் தவளை சிற்றினம் ஆகும்.[2][3] அகத்தியமலையில் இதன் வாழிட வகையின் பெயரால் சிற்றினம் பெயரிடப்பட்டது.

விளக்கம்

[தொகு]

முதிர்ச்சியடைந்த தவளையின் உடல் நீளம் 18.04 முதல் 21.48 மி.மீ. தலை அகலம் தலை நீளத்தை விட பெரியது. மூக்கு கூர்மையானது, கண் நீளத்திற்குச் சமமான துணை; செவிப்பறை தனித்துவமானது. முன்கை, கையை விட சிறியது. பக்கவாட்டு தோல் விளிம்பு இல்லை. தொடை நீளத்திற்குச் சமமான கீழ்க்காலெலும்புடையது. கை மற்றும் கால்களில் முக்கியமாகக் காணப்படும் துணை எலும்பு முடிச்சு சிறியது; வட்டு நன்கு வளர்ந்த மற்றும் தனித்துவமானது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. IUCN SSC Amphibian Specialist Group (2022). "Raorchestes ponmudi". IUCN Red List of Threatened Species 2022: e.T58916A166108423. https://www.iucnredlist.org/species/58916/166108423. பார்த்த நாள்: 26 December 2022. 
  2. "Raorchestes agasthyaensis". India Biodiversity Portal. பார்க்கப்பட்ட நாள் 26 September 2014.
  3. Frost, Darrel R. (2014). "Raorchestes agasthyaensis Zachariah, Dinesh, Kunhikrishnan, Das, Raju, Radhakrishnan, Palot & Kalesh, 2011". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 26 September 2014.
  4. K. Deuti, Zoological Survey of India in Venkataraman, K., Chattopadhyay, A. and Subramanian, K.A. (editors). 2013. Endemic Animals of India(vertebrates): 1–235+26 Plates. (Published by the director, Zoological Survey of india, Kolkata)

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Data related to Raorchestes agasthyaensis at Wikispecies