அகர் | |
---|---|
பண்டைய நகரம் | |
அகரில் காணப்படும் மேவாரின் முன்னாள் ஆட்சியாளர்களின் நினைவுச் சின்னங்கள் | |
ஆள்கூறுகள்: 24°35′14″N 73°43′18″E / 24.587258°N 73.721550°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ராஜஸ்தான் |
மாவட்டம் | உதய்பூர் |
அகர் (Ahar) என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரமாகும். இது இந்தியாவின் தற்போதைய ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள அகர் ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது.
1950களின் பிற்பகுதியிலும் 1960களின் முற்பகுதியிலும் நடந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் இப்பகுதி செப்புக் கால அகர்-பனாஸ் கலாச்சாரத்தின் தளம் என்பதை வெளிப்படுத்தியது. [2] இங்கு இரண்டு தனித்துவமான கலாச்சாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன - முதல் அகர் காலம் (கிமு 2580 முதல் கிமு 1500 வரை) , இரண்டாம் அகர் காலம் (கிமு 1000 முதல்). [2]
நவீனத்திற்கு முந்தைய சகாப்தத்தில், ஏறக்குறைய பொ.ச. 948இல் மேவாரின் உதய்பூர் இராச்சியத்தில் குகில ஆட்சியாளர்களின் தலைநகரான அகர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இருந்தது. மேலும் நக்டாவிற்கு மாற்றப்படும் வரை 1116 வரை அது தலைநகராக இருந்தது. [3] [4] வரலாற்றில் அகதபுரம் என்றும் அத்புரம் என்றும் இதனை அழைத்துள்ளனர். [4]