அகர்-பனாஸ் பண்பாடு | |
---|---|
[[File:|264px|alt=]] | |
புவியியல் பகுதி | தெற்கு ஆசியா |
காலப்பகுதி | வெண்கலக் காலம் (கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு) |
காலம் | கிமு 3000 - 1500 |
வகை களம் | தொல்லியல் களம் |
முக்கிய களங்கள் | இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம், இந்தியா |
இயல்புகள் | சிந்துவெளி நாகரீகம், காவி நிற மட்பாண்டப் பண்பாடு, கல்லறை எச் பண்பாட்டிற்கு சமகாலத்தைவை |
முந்தியது | செப்புக் காலம் |
பிந்தியது | கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு, வேதகாலம் |
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
அகர் பண்பாடு அல்லது பனாஸ் பண்பாடு (Ahar culture or Banas culture) மேற்கு இந்தியாவின் தென்கிழக்கு இராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் செம்புக் காலத்திய, தொல்பொருள் பண்பாட்டுக் களம் ஆகும்.[1]
கிமு 3000 - 1500 வரை செழிப்புடன் விளங்கிய இப்பண்பாட்டுக் களம், சிந்துவெளி நாகரீகம், காவி நிற மட்பாண்டப் பண்பாடு, கல்லறை எச் பண்பாட்டிற்கு சமகாலத்தைவை ஆகும். இப்பண்பாடு அகர் நதி, பனாஸ் ஆறு மற்றும் பெராச் ஆறுகளின் கரைகளில் செழிப்புடன் விளங்கியது.
அகர்-பனாஸ் மக்கள் ஆரவல்லி மலைத்தொடர்களில் செப்பு கனிமங்களை கண்டெடுத்து, கோடாரி போன்ற தொல் பொட்களை செய்தனர். மேலும் கோதுமை, பார்லி போன்ற தானியங்களை பயிரிட்டனர்.
தென்கிழக்கு இராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்தியப் பிரதசத்தில் அகர் பண்பாட்டுக்குரிய 90 தொல்லியல் களங்கள் கண்டறிந்துள்ளனர். பெரும்பான்மையான தொல்லியல் களங்கள் பனாஸ் ஆற்றின் கரையிலும், அதன் கிளை அற்றின் கரைகளில் அடர்த்தியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ஜாவேத், மண்டசௌர், காயத்தா மற்றும் தங்வாடா பகுதிகளிலும், இராஜஸ்தானில் உதய்பூர் மாவட்டம், சித்தோர்கார் மாவட்டம், டுங்கர்பூர் மாவட்டம், பான்ஸ்வாரா மாவட்டம், அஜ்மீர் மாவட்டம் டோங் மாவட்டம் மற்றும் பில்வாரா மாவட்டங்களிலும் இப்பண்பாட்டுக் களங்கள் உள்ளது [1]
2003-இல் தொல்லியல் அறிஞர்கள் இப்பாண்பாட்டுக் களங்களை அகழ்வாய்வு செய்கையில் கிமு 2100 - 1700 காலத்திய பெரும் அளவிலான முத்திரைகள் கண்டெடுத்தனர். புனே நகரத்தின் டெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழக அருங்காட்சியகத்தினரும் இணைந்து அகழ்வாய்வு செய்த போது நூற்றுக்கும் மேற்பட்ட முத்திரைகள் கண்டெடுத்தனர்.
இப்பண்பாட்டுக் களத்தில் கண்டெடுக்கப்பட்ட பல தொல்பொருட்கள், சிந்துவெளி நாகரீகம் மற்றும் நடு ஆசியா நாடுகளான ஆப்கானிஸ்தான், கிழக்கு துருக்மெனிஸ்தான், தெற்கு உஸ்பெகிஸ்தான் நாடுகளின் ஆக்சஸ் பண்பாட்டுக் களத்தின் தொல்பொருட்களுடன் தொல்பொருட்களுடன் ஒத்திருந்தன.[2]
வேறுபட்ட அகர் பண்பாட்டின் கருப்பு மற்று சிவப்பு மட்பாண்டங்கள், கிண்ணங்கள் வெள்ளைப் புள்ளிகளுடன் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. [3]
எச்சரிக்கை: இயல்புநிலை வரிசைப்படுத்து விசை Archaeological Culture " முன்னால் இயல்புநிலை வரிசைப்படுத்து விசை "Ahar-Banas culture" ஐ மீறுகிறது.