![]() | |
வகை | ஆராய்ச்சி நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1946[1] |
பணிப்பாளர் | முனைவர் கிசோர் எம் பக்னிகர்[2] |
அமைவிடம் | , , இந்தியா |
வளாகம் | நகர்ப்புறம் |
நிறுவன இயக்குநர் | சங்கர் புருசோத்தம் அகர்கர் |
இணையதளம் | www.aripune.org |
![]() |
அகர்கர் ஆராய்ச்சி நிறுவனம் (Agharkar Research Institute) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி, மானிய உதவி ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். 1946 ஆம் ஆண்டில் மகாராட்டிர அறிவியல் சாகுபடி சங்கம் என்ற பெயரில் ஓர் ஆராய்ச்சி நிறுவனமாக இது நிறுவப்பட்டது. இதன் நிறுவனரும் இயக்குனருமான மறைந்த பேராசிரியர் சங்கர் புருசோத்தம் அகர்கரின் நினைவாக 1992 ஆம் ஆண்டில் அகர்கர் ஆராய்ச்சி நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது. இங்கு விலங்கு அறிவியல், நுண்ணுயிர் அறிவியல் மற்றும் தாவர அறிவியல் ஆகியவற்றில் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.[3]