மகாராஜா அக்ராசன், என்பவரிடமிருந்து அகர்வால்கள் தங்கள் வம்சாவளியைக் கூறுகின்றனர் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
இந்தியா | |
மொழி(கள்) | |
இந்தி, பஞ்சாபி | |
சமயங்கள் | |
பெரும்பாலோனோர் இந்து ஒரு சிலர் சைனம் |
அகர்வால் (Agrawal) என்பவர்கள் வடக்கு, மத்திய மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் காணப்படும் இந்து மற்றும் சைண சமூகமாகும். முக்கியமாக ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், தில்லி, சத்தீசுகர், குசராத்து மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் காணப்படுகின்றனர். [1] 1947 இல் இந்தியா பிரிக்கப்படுவதற்கு முன்னர், இச்சமூகத்தினர் நவீன பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்திலும் காணப்பட்டனர். [2] இந்தியாவில் மொத்த அகர்வால் மக்கள் தொகை சுமார் 10-15 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இந்திய மக்கள் தொகையில் 1% ஆக உள்ளனர் . [3] மகேசுவரி மற்றும் ஆசுவால் போன்ற பிற வணிக சமூகங்களை உள்ளடக்கிய பெரிய வர்த்தக சமூகத்தில் அகர்வால்கள் முன்னணியில் உள்ளனர் .
இச்சமூகத்தின் உறுப்பினர்கள் தங்கள் வணிகத் திறன்களுக்காக அறியப்பட்டவர்கள். மேலும், பல ஆண்டுகளாக இந்தியாவில் செல்வாக்கு மிக்கவர்களாகவும் வளமானவர்களாகவும் உள்ளனர். 2016 ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்களின் பொதுவான குடும்பப்பெயர்யர்களில் அகர்வால் (மற்றும் அதன் மாறுபாடுகள்) முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது பொதுவான குடும்பப்பெயர் குப்தா. [4] நவீன தொழில்நுட்ப மற்றும் இணையவழி நிறுவனங்களில் கூட அவை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான ஒவ்வொரு 100 நிதிகளுக்கும் 40 பேர் ஒரு அகர்வால் நிறுவிய நிறுவனங்களுக்குச் சென்றதாக 2013 ஆம் ஆண்டில் தெரிவிக்கப்பட்டது. [5] இந்தியாவில் இருந்து 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டைத் தாண்டிய மொத்தம் நான்கு ஸ்டார்டப் நிறுவனக்களில், பேடிஎம் என்பதைத் தவிர மற்ற அனைத்தும் அகர்வால்களால் நிறுவப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், பல அகர்வால்கள் தங்கள் கோத்திரங்களை (அல்லது அந்தந்த கோத்திரங்களின் கீழ் வரும் குடும்பப் பெயர்களை) தங்கள் குடும்பப் பெயர்களாகப் பயன்படுத்துகின்றனர்.
புராணங்களின்படி, சூரிய வம்சத்தின் மன்னர் அக்ராசனிடமிருந்து தாங்கள் வந்ததாக அகர்வால்கள் கூறுகின்றனர். [6] உண்மையில், அகர்வால் என்றால் "அக்ராசனின் குழந்தைகள்" அல்லது "அக்ரோகா மக்கள்" என்பதாகும். அரியானாவின் ஹிசார் அருகே பண்டைய குருதேசம், பாஞ்சாலம் போன்றவற்றை அக்ராசன் நிறுவியதாகக் கூறப்படுகிறது. [7]