![]() | |
வகை | பொது நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1957 |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா, கானா, கென்யா, மடகாஸ்கர், மொரிசியஸ் மொசாம்பிக், நைஜீரியா, உருவாண்டா, தான்சானியா, உகாண்டா, சாம்பியா |
முதன்மை நபர்கள் | மருத்துவர் அமர் அகர்வால் |
தொழில்துறை | நலம் பேணல் |
உற்பத்திகள் | கண் மருத்துவம் கண் மருத்துவப் படிப்புகள் |
இணையத்தளம் | www |
அகர்வால் கண் மருத்துவமனை (Dr. Agarwal's Eye Hospital) தமிழ்நாட்டின் சென்னை மாநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. இதனை கண் மருத்துவர்களான ஜெய்வீர் அகர்வால்[1] டாக்டர் ஜெய்வீர் அகர்வாலின் மனைவி மற்றும் மகன் ஆகியோரும் கண் மருத்துவர் ஆவர். ஜெய்வீர் அகர்வால் 16 நவம்பர் 2009 அன்று காலமானார்.[2][3][4] மற்றும் அவரது மனைவி தாகிரா அகர்வால் ஆகியோர் இணைந்து 1957ம் ஆண்டில் நிறுவினர். தற்போது இக்கண் மருத்துவ மனையின் கிளைகள் இந்தியா மட்டுமல்லாமல் 10 ஆப்பிரிக்கா நாடுகளில் 15 கண் மருத்து மையங்கள் கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 103 கண் மருத்துவ மையங்களுடன் இயங்குகிறது.[5][6][7] அகர்வால் மருத்துவமனையின் தற்போதைய தலைவரும், மேலாண்மை இயக்குநரான அமர் அகர்வால் உள்ளார்.[8]
அகர்வால் மருத்துவமனை சென்னையில் மட்டும் 16 கிளைகளும், பிற மாவட்டங்களில் 16 கிளைகளும் உள்ளது. பெங்களூரு]] நகரத்தில் 11 கிளைகளும்; தெலங்காணா மாநிலத்தில் 8 கிளைகளும்; ஆந்திர மாநிலத்தில் 5 கிளைகளும்;[9] ஜெய்ப்பூரில் ஒரு கிளையும், அந்தமானின் போர்ட் பிளேரில் ஒரு கிளையும்; கேரளா மாநிலத்தில் 2 கிளைகளும்; கர்நாடகாவில் 3 மூன்று கிளைகளும்; ஒடிசா மாநிலத்தில் 2 கிளைகளும்; மகாராட்டிரா மாநிலத்தில் 4 கிளைகளும்; மத்தியப் பிரதேசத்தில் 3 கிளைகளும்; குஜராத்தில் 6 கிளைகளும் கொண்டுள்ளது.[10]
5 ஆகஸ்டு 2022 அன்று மகாராட்டிரா மாநிலத்தில் மேலும் 5 கண் மருத்துவமனைகளை துவங்கத் திட்டமிட்டுள்ளது.
அகர்வால் மருத்துவமனை கானா, கென்யா, மடகாஸ்கர், மொரிசியஸ் மொசாம்பிக், நைஜீரியா, உருவாண்டா, தான்சானியா, உகாண்டா மற்றும் சாம்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் 15 கண் மருத்துவமனைகளைக் கொண்டுள்ளது.[7]
சென்னை அகர்வால் மருத்துவமனையின் கண் மருத்துவக் கல்லூரியில் கண் மருத்துவம் தொடர்பான மருத்துவப் படிப்புகளும், இள நிலை மற்று முதுநிலை பார்வைத்திறனளவீடு படிப்புகளும் கற்றுத்தரப்படுகிறது.