ஆக்கா அருவி Akaa Falls | |
---|---|
![]() | |
![]() | |
அமைவிடம் | ஆகா , அகுபெம் வடக்கு மாவட்டம், கிழக்கு மண்டலம், கானா |
ஆள்கூறு | 6°10′30″N 0°11′46″W / 6.17503°N 0.19614°W |
அகா அருவி (Akaa Falls) மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது. கொஃபோரிடுவாவிற்கு வடகிழக்கே 21 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அகுபெம் வடக்கு மாவட்டத்தில் உள்ள அக்யெரெமண்டெங் கிராமத்திற்கு அருகில் இந்த அருவி அமைந்துள்ளது.[1] அழகான நீர்வீழ்ச்சியைத் தவிர இங்குள்ள அசாதாரணமான பாறை அமைப்புகளும் பார்ப்பதற்கு ஓர் அற்புதமான காட்சியாகும். நீரின் அளவு அதிகமாக இல்லாத வறட்சிக் காலங்களில் இந்தப் பாறைகளின் அழகு இன்னும் அதிகமாகத் தெரியும்.
போடி நீர்வீழ்ச்சியிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அகா அருவி அதற்கான நீரை போடி ஆற்றில் இருந்து எடுக்கிறது. போடி அருவியும் அதற்கான நீரை போடி ஆற்றில் இருந்தே எடுக்கிறது.[2]