![]() பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் போது | |
செய்பொருள் | மரம், தோல் மற்றும் இழை |
---|---|
உருவாக்கம் | 1730-1745 |
இடம் | கானா பகுதி,[1] மேற்காபிரிக்கா |
தற்போதைய இடம் | பிரித்தானிய அருங்காட்சியகத்தில் 26ஆம் அறை |
அக்கான் முரசு, மேற்கு ஆப்பிரிக்காவில் செய்யப்பட்ட ஒரு முரசு. இது பின்னர் வட அமெரிக்காவில் உள்ள வெர்சீனியா குடியேற்றப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்கப் பொருட்களில் மிகப் பழமையானது இதுவே. உலகில் இப்போது கிடைப்பவற்றுளும் இதுவே பழமையானதாக இருக்கக்கூடும்.[2] இந்த முரசு, அடிமை வணிகத்தின் ஒரு பகுதியாக 12 மில்லியன் என மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையான மக்கள் அத்திலாந்திக் பெருங்கடலுக்குக் குறுக்காகக் கொண்டுசெல்லப்பட்டதில் மூன்று கண்டங்களின் தொடர்பின் எச்சங்களில் ஒன்றாக உள்ளது.[1]