அக்குப்ரா

அக்குப்ரா என்பது ஆசுத்திரேலியாவில் புழக்கத்தில் உள்ள ஒருவகைத் தொப்பி ஆகும். இதன் அகலமான விளிம்பு, ஆசுத்திரேலியப் பண்பாட்டின், சிறப்பாக ஆசுத்திரேலிய நாட்டுப்புறப் பண்பாட்டின் தனித்துவமான ஒன்றாகத் திகழ்கிறது. அக்குப்ரா என்னும் பெயர் ஆசுத்திரேலியத் தொல்குடி மக்களின் மொழியில் தலையை மூடுதல் எனப் பொருள்படும் சொல்லில் இருந்து பெறப்பட்டது என நம்பப்படுகிறது.[1][2][1]

இந்த வகையைச் சேர்ந்த சிறந்த தொப்பிகள் முயலின் உரோமங்களை அழுத்திப் பெறப்படும் உரோம அட்டைகளினால் அகலமான விளிம்புகளோடு செய்யப்படுகின்றன. எனினும் இந்த வகையைச் சேர்ந்த எல்லாத்தொப்பிகளையுமே அக்குப்ரா என அழைப்பது உண்டு. காற்று காலங்களில் தொப்பி தலையுடன் இறுக்கமாக இருப்பதற்காகப் பல அக்குப்ராக்களில் இழுத்துக் கட்டும் பட்டிகள் இருக்கும். அத்துடன் இப் பட்டிகள் தொப்பிக்கு அழகையும் கொடுக்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "The Akubra Story – Akubra Hats".
  2. "The iconic Aussie Akubra | SBS News".