அக்சய் குமார் ஜெயின் | |
---|---|
பிறப்பு | பிஜய்கார், அலிகார் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா | 30 திசம்பர் 1915
இறப்பு | 31 திசம்பர் 1993 மும்பை, மகாராட்டிரா, இந்தியா | (அகவை 78)
பணி | பத்திரிக்கையாளர் எழுத்தாளர் இந்திய சுதந்திர ஆல்வலர் |
செயற்பாட்டுக் காலம் | 1939–93 |
அறியப்படுவது | நவாரத் டைம்ஸ் |
விருதுகள் | பத்ம பூசண் சாகித்திய இரத்னா விருது |
அக்ஷய் குமார் ஜெயின் (Akshay Kumar Jain) (1915-1993) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும், எழுத்தாளரும், பத்திரிகையாளரும் மற்றும் டைம்ஸ் குழுமத்திற்கு சொந்தமான இந்தி நாளிதழான 'நவபாரத் டைம்ஸ் என்ற இதழின் ஆசிரியருமாவார்.[1] இவர் தேசிய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் (இந்தியா) நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். மேலும் 1972 இல் அமைப்பு உருவாக்கப்பட்டபோது அதன் வரவேற்புக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.[2]
1915 டிசம்பர் 30, அன்று இந்திய உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் உள்ள பிஜைகரில் திவானாக இருந்த உரூப் கிசோர் ஜெயினுக்கு மகனாகப் பிறந்தார். ஜெயின் 1938 இல் இந்தூரின் கோல்கர் அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து 1940 இல் அலிகார் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றார் (எல்.எல்.பி) .[1] இந்த காலகட்டத்தில், இவர் இந்திய சுதந்திர இயக்கத்துடன் தொடர்பு கொண்டு 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார்.
1949 ஆம் ஆண்டில் டெய்லி சைனிக் என்ற இடத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் 1946 ஆம் ஆண்டில் தினசரி நிறுவப்பட்டபோது நவபாரத் டைம்ஸில் சேருவதற்கு முன்பு இந்துஸ்தான் சமச்சார்,[3] சுதர்சன் வார இதழ் (ஆசிரியர் 1940) மற்றும் வீர் (1940–46) ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தார். 1977 இல் ஓய்வுபெறும் வரை 31 ஆண்டுகள் அதன் தலைமை ஆசிரியராக இருந்தார்.
அகில இந்திய செய்தித்தாள் தொகுப்பாளர்கள் மாநாட்டின் (1964 மற்றும் 1967) இரண்டு அமர்வுகளுக்கு ஜெயின் தலைமை தாங்கினார். மேலும் இரண்டு முறை இந்திய பத்திரிகை அமைப்பின் உறுப்பினராக பணியாற்றினார். இவர் சமச்சார் பாரதி என்ற செய்தி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக இருந்தார், இந்தி பத்ரகர் சங்கத்திற்கு தலைமை தாங்கினார். பத்திரிகை சுதந்திரம் மற்றும் நியாயமான பத்திரிகை நடைமுறைகளை ஊக்குவிக்கும் உலகளாவிய அமைப்பான சர்வதேச பத்திரிகை நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார். இவர் இந்தி மொழியில் பல புத்தகங்களை வெளியிட்ட்டுள்ளர். அதில் இயாதா ராகி முலகதெம் மற்றும் பகபனா கி பேதம் ஆகியவை அடங்கும் . இலக்கியம் மற்றும் பத்திரிகை ஆகியவற்றில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1967 ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் கௌரவமான பத்ம பூசண் விருதினை இவருக்கு வழங்கியது.[4] சாகித்ய இரத்னா விருதினை 1970இல் பெற்ற ஜெயின், 1993 மார்ச் 31, அன்று, தனது 78 ஆவது வயதில் இறந்தார்.[5]