அக்சா பள்ளிவாசல், காதியன் | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | காதியன், நகரம், பஞ்சாப், இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 31°49′8″N 75°22′44″E / 31.81889°N 75.37889°E |
சமயம் | இசுலாம் |
இணையத் தளம் | www.ahmadiyyamuslimjamaat.in/ |
அக்சா பள்ளிவாசல் (Aqsa Mosque) இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் காதியன் நகரில் உள்ளது. இது ஓர் அகமதி இசுலாம் வகை பள்ளிவாசலாகும். 1876 ஆம் ஆண்டில் அகமதிய இசுலாம் இயக்கத்தை தோற்றுவித்த மிர்சா குலாம் அகமதுவின் தந்தையான மிர்சா குலாம் முர்தாசா இப்பள்ளிவாசலைக் கட்டினார். அக்சா பள்ளிவாசல் 20 ஆம் நூற்றாண்டு முழுவதும் அகமதியா நிர்வாகத்தால் பலமுறை புதுப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டது. கட்டிடத்தின் கொள் திறன் அதன் ஆரம்பநிலை 200 பேர் என்பது 15,000 பேர் என 2014 ஆம் ஆண்டளவில் அதிகரித்தது. குலாம் அகமது குடும்ப வீட்டின் வளாகத்திற்குள் அக்சா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்தியாவின் அகமதியா இசுலாம் சமூகத்தின் மையமாக வெள்ளை கோபுரம் மற்றும் சமூகத்தின் முக்கியமான அலுவலகங்களுக்கு அருகில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளது. [1] பல்வேறு மத கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளும் இங்கு நடைபெறுகின்றன. [2]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)