அக்நா மலைகள் | |
---|---|
அக்நா மலையின் வடக்குப்பகுதியின் மெகல்லன் ரேடார் படம். வட்டமாகத் தோன்றுவது வாண்டா கிண்ணக்குழி]] ஆகும். | |
வகை | மலைகள் |
ஆயம் | 68°54′N 318°12′E / 68.9°N 318.2°E |
விட்டம் | 830 கி.மீ |
Eponym | அக்நா |
அக்நா மலைகள் (Akna Montes) என்பவை வெள்ளியின் மையத்தில் 68.9°வ, 318.2°கி ஆள்கூறுகளில் உள்ள 830 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஒரு மலைத் தொடராகும்.
வடக்குத் தெற்காக ஏற்ற முகத்துடன் நீளும் முகட்டுப் பட்டையால் லட்சுமி பிலானம் என்ற உயரமான மேட்டுநிலப்பகுதியின் மேற்கு எல்லை உருவாகியுள்ளது. எரிமலை வெடிப்பின் விளைவாக லட்சுமி மேட்டுநிலப்பகுதி உருவாகி அதனைச் சுற்றிலும் எல்லா பக்கங்களிலும் மலைத் தொடர் சங்கிலிகள் சூழ்ந்து காணப்படுகின்றன. இம்மலைகளுக்கு அருகில் உள்ள சமவெளிகள் உருவம் சிதைந்து காணப்படுகின்றன. சமவெளிகள் தோன்றியதற்குப் பின்னரும் கூட சில மலைப்பகுதிகள் உருவாகியிருக்கலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது.[1]