அக்னி சாட்சி | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ராஜம் பாலச்சந்தர் |
கதை | கே. பாலச்சந்தர் |
இசை | எம். எசு. விசுவநாதன் |
நடிப்பு | சிவகுமார் சரிதா |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
விநியோகம் | கவிதாலயா தயாரிப்பகம் |
வெளியீடு | 14 நவம்பர் 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அக்னி சாட்சி (Agni Sakshi) 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. பாலச்சந்தர் இயக்கிய இப்படத்தில் சிவகுமார், சரிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2] சரிதா இப்படத்தில் மனநோயாளியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் இப்படத்தின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை சரிதா சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதினை வென்றார். இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சீமா ஆகியோர் அவர்களாகவே தோன்றினர்.
இது எம். எசு. விசுவநாதன் இசையமைத்த திரைப்படமாகும்.[4]
வ. எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
1 | ஆம் பாரதி தமிழுக்கு | சரிதா | வாலி |
2 | ஆரம்பம் அதிகாரத்தின் | எம். எசு. விசுவநாதன் | |
3 | அடியே கண்ணம்மா | பி. சுசீலா | |
4 | கனா காணும் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சரிதா | |
5 | உன்னை எனக்கு | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
6 | வணக்கம் முதல் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |