அக்ரசேன் படிக்கிணறு (Agrasen ki Baoli) இந்தியாவின் தேசியத் தலைநகரான புதுதில்லியின், கன்னாட்டு பிளேசு பகுதியின் அய்லி வீதியில் 60 மீட்டர் ஆழமும், 15 மீட்டர் அகலமும், 108 படிகளுடன் கூடிய படிக்கிணறு உள்ளது. [1] அக்ரசேன் படிக்கிணற்றை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.
இப்படிக்கிணற்றை மன்னர் அக்ரசேன் நிறுவினார் என நம்பப்படுகிறது. கிபி 14ம் நூற்றாண்டில் இப்படிக்கிணற்றை அகர்வால் ஜெயின் சமூகத்தினர் சீரமைத்தனர்.