அக்ரீமெண்ட் நடவடிக்கை | |||||||
---|---|---|---|---|---|---|---|
மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நியூசிலாந்து ரொடீசியா ஐக்கிய இராச்சியம் | ஜெர்மனி இத்தாலி |
||||||
பலம் | |||||||
~1,000 | தெரியவில்லை | ||||||
இழப்புகள் | |||||||
746 பேர் 1 குரூசர் 2 டெஸ்டிராயர்கள் 4 எந்திர டொர்பீடோ படகுகள் 2 எந்திர லாஞ்சுகள் பல தாக்குதல் படகுகள் | 16 கொல்லப்பட்டனர் 50 காயமடைந்தனர் 30 வானூர்திகள் |
அக்ரீமெண்ட் நடவடிக்கை (Operation Agreement) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு அதிரடித் தாக்குதல் நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் அச்சுநாட்டுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த டோப்ருக் நகரை நேச நாட்டுப் படைகள் தாக்கி அங்கிருந்த நேச நாட்டுப் போர்க்கைதிகளை விடுவிக்க முயன்றன.[1][2][3]
1940-42ல் வடக்கு ஆப்பிரிக்க களத்தில் நேச-அச்சு தரப்பினரடையே கடும் சண்டை நடந்து வந்தது. ஜூன் 1942ல் நிகழ்ந்த கசாலா சண்டையின் இறுதியில் நேச நாட்டுப் படைகளின் வசமிருந்த டோப்ருக் நகரம் அச்சுப் படைகளால கைப்பற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான நேச நாட்டு வீரர்கள் போர்க்கைதிகளாயினர். அவ்வாறு கைப்பற்றப்பட்டவர்களுள் பலர் டோப்ருக்கிலேயே சிறை வைக்கப்பட்டிருந்தனர். கசாலா சண்டைக்குப் பின்னரும் வடக்கு ஆப்பிரிக்கக் களத்தில் தொடர்ந்து சண்டைகள் நடந்து வந்தன. செப்டம்பர் 1942ல் அலாம் எல் அல்ஃபா சண்டைக்கும் இரண்டாம் எல் அலாமீன் சண்டைக்கும் இடையே ஒரு சிறு கால இடைவெளி விழுந்தது. இதனை பயனபடுத்திக் கொண்டு அச்சு படைநிலைகளின் பின்புறம் ஊடுருவித் தாக்கி நாசம் விளைவிக்க நேச நாட்டுத் தளபதிகள் முடிவு செய்தனர்.
இத்திடீர் தாகுதலுக்கு அக்ரீமெண்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. அச்சு நாட்டு வானூர்தி ஓடுதளங்களை அழித்தல், தளவாடப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல், நேச நாட்டுப் போர்க்கைதிகளை விடுவித்தல் என இத்திடீர் தாக்குதலுக்கு பல இலக்குகள் விதிக்கப்பட்டிருந்தன. இதற்காக நூற்றுக்கணக்கான படைவீரர்களை ஏற்றிக் கொண்டு ஒரு நேச நாட்டு கப்பல் கூட்டம் டோப்ருக் நகரை நெருங்கியது. ஆனால் டோப்ருக் அருகேயுள்ள கடற்கரைப்பகுதியில் திட்டமிட்டபடி படையிறக்கம் நிகழவில்லை. குறைபாடான திட்டமிடுதல், எதிர்பார்த்ததை விட பலமான அச்சு பாதுகாப்பு அரண்கள் போன்றவை அக்ரீமெண்ட் திட்டத்தை ஆரம்பத்திலேயே குலைத்து விட்டன. அச்சு நாட்டுப் படைகளின் விரைவான எதிர்த்தாக்குதலால், நூற்றுக்கணக்கான நேச நாட்டுப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் கைது செய்யப்பட்டனர். பல நேச நாட்டுக் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன/சேதமடைந்தன. அக்ரீமெண்ட் நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்தது. எஞ்சிய நேச நாட்டுப் படைகள் பின்வாங்கி தமது தளங்களுக்குச் சென்று விட்டன.