அங்காசாபுரி Angkasapuri | |
---|---|
புக்கிட் புத்ராவில் அங்காசாபுரி | |
பொதுவான தகவல்கள் | |
வகை | அலுவலகம் மற்றும் ஒலிபரப்பு மாளிகை |
கட்டிடக்கலை பாணி | நவீன கட்டிடக்கலை |
இடம் | லெம்பா பந்தாய், கோலாலம்பூர் மலேசியா |
முகவரி | மலேசிய ஒலி ஒளிபரப்புத் துறை, அங்காசாபுரி, 50614, கோலாலம்பூர் |
ஆள்கூற்று | 3°6′40.0″N 101°40′13.9″E / 3.111111°N 101.670528°E |
கட்டுமான ஆரம்பம் | 1966 |
நிறைவுற்றது | பிப்ரவரி 1968 |
உரிமையாளர் | மலேசிய வானொலி தொலைக்காட்சி (RTM) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 8 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | ரொனால்ட் பிராட் |
கட்டிடக்கலை நிறுவனம் | BEP கட்டிடக்கலை நிறுவனம் |
அங்காசாபுரி (மலாய்; ஆங்கிலம்: Angkasapuri) என்பது மலேசிய தகவல் துறை அமைச்சின் முக்கிய அரசாங்கக் கட்டிடம் ஆகும். இது மலேசிய வானொலி தொலைக்காட்சியின் (RTM) தலைமையகமாகவும் உள்ளது.
அங்காசாபுரி கட்டிடம் லெம்பா பந்தாய் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.[1][2]
மலேசிய வானொலி தொலைக்காட்சி, 1946-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி சிங்கப்பூரில் அமைக்கப் பட்டது.[3] 1957-ஆம் ஆண்டு மலாயா விடுதலை அடைந்ததும்; ரேடியோ மலாயா என்பது மலாயா வானொலி; சிங்கை வானொலி என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது.
ரேடியோ மலாயா எனும் மலாயா வானொலி பின்னர் 1963-ஆம் ஆண்டில், மலேசிய வானொலி என்று பெயர் மாற்றம் கண்டது.[4]
மலாயா வானொலி 1 சனவரி 1959 அன்று; கோலாலம்பூர், விக்டரி அவென்யூ சாலையில் (Victory Avenue) இருந்த பெடரல் அவுஸ் (Federal House) எனும் கூட்டரசு மாளிகையில் இருந்து அதன் முதல் வானொலி ஒலிபரப்பை மேற்கொண்டது. கூட்டரசு மாளிகைக்குச் செல்வதற்கு முன்னர்,[5] ரேடியோ மலாயாவின் கோலாலம்பூர் முதன்மைக் கட்டிடம் கோலாலம்பூர் ஜாவா தெருவில் (தற்போது ஜாலான் துன் பேராக்) ஓரியண்டல் கட்டிடத்தில் (Oriental Building) தற்காலிகமாக இயங்கியது.
அதன் தற்காலிக ஒலிப்பதிவுக் கூடம் கோலாலம்பூர் யாங் சாலையில் (தற்போது: Pesiaran Raja Chulan) இருந்த டாங் லிங் மருத்துவமனையில் (Tang Ling Hospital) இயங்கியது. இந்த டாங் லிங் மருத்துவமனை ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்துதான், பிரித்தானியர்களிடம் இருந்து மலாயா விடுதலை பெற்றதை மலேசிய முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான், மலாயா மக்களுக்கு அறிவித்தார்.
1963 செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி மலேசியாவில் தொலைக்காட்சி அறிமுகம் ஆனதும் அதற்கு மலேசிய வானொலி தொலைக்காட்சி எனும் புதிய பெயர் கிடைத்தது 1963 டிசம்பர் 28 ஆம் தேதி தொலைக்காட்சி ஒளிபரப்புகள் தொடங்கின.
28 டிசம்பர் 1963 அன்று, கோலாலம்பூர், அம்பாங் சாலையில் இருந்த டேவான் துங்கு அப்துல் ரகுமான் மண்டபத்தில் (தற்போது மலேசிய சுற்றுலா தகவல் மையம்; Malaysian Tourist Information Centre) இருந்து தொலைக்காட்சி ஒளிபரப்புகள் தொடங்கப்பட்டன.[6]
1968-ஆம் ஆண்டு இரண்டாவது ஒளிபரப்பு அலை அங்காசாபுரியில் இருந்து தனது சேவைகளைத் தொடங்கியது. 1972-ஆம் ஆண்டு கல்வி ஒளிபரப்பு தொடங்கப் பெற்றது.
மலேசியாவின் புதிய ஒலிபரப்பு மையத்திற்கு, "அங்காசாபுரி" என்று பெயரிடப்பட்டது, 1966-இல் கட்டுமானம் தொடங்கி பிப்ரவரி 1968-இல் நிறைவடைந்தது. அங்காசாபுரியை மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் 17 பிப்ரவரி 1968 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.[7][8]
துங்கு அப்துல் ரகுமான் உரையாற்றும் போது, அப்போதைய நிலையில் மலேசிய நாட்டின் அனைத்து அரசாங்கக் கட்டிடங்களிலும் அங்காசாபுரி கட்டிடம் மட்டுமே மிக அழகான கட்டிடம் என்றும்; முதன்மை இடம் வகிக்கும் கட்டிடம் என்றும் புகழாரம் செய்தார்.[7]
அங்காசாபுரியில் இருந்து முதல் ஒலிபரப்பு 6 அக்டோபர் 1969 அன்று தொடங்கியது. அதே நாளில் அம்பாங் சாலையில் இருந்த ஒலிபரப்பு அறைகள் மலேசியாவின் தேசியப் பாடலான நெகராகூ பாடலுடன் தங்களின் இறுதி ஒலிபரப்புகளைச் செய்தன.[9]
விசுமா டெலிவிசன் (Wisma Televisyen) அல்லது விசுமா டிவி (Wisma TV) எனும் தொலைக்காட்சி வளாகம் 6 நவம்பர் 1969-இல் தொடக்கப்பட்டது.[6][10]
அதன் பின்னர், மலேசிய வானொலி எனும் பெயர் , 1 சனவரி 1971-இல் ரங்காயான் நேசனல் (Rangkaian Nasional) என மாற்றம் கண்டது; மற்றும் நாட்டின் முதல் 24 மணி நேர வானொலி நிலையமாகவும் மாறியது.
1978 டிசம்பரில், அங்காசாபுரியில் இருந்து வண்ணத் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப் பட்டது. முதல் வண்ண நிகழ்ச்சி புஸ்பவர்ணா (Puspawarna) எனும் பெயரில் ஒளிபரப்பப்பட்டது. சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கான வண்ணத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகஸ்டு 1980-இல் தொடங்கப்பட்டன.
அங்காசாபுரிக்கான செயற்கைக் கோள் வளாகம் (Earth-Satellite Complex) 17 டிசம்பர் 1988-இல் திறக்கப்பட்டது. அதன் விலை மதிப்பு RM 3 ரிங்கிட் மில்லியன் ஆகும்.[11]
2012-ஆம் ஆண்டு அங்காசாபுரி வளாகத்தில் விசுமா பெரித்தா ஆர்டிஎம் எனும் செய்தி அறைகள் அடங்கிய வளாகம் உருவாக்கப்பட்டது. அந்த வளாகத்தை 6 சூன் 2012 அன்று அப்போதைய மலேசிய தகவல், தொடர்பு, கலை மற்றும் கலாசார அமைச்சர் டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ராயிஸ் யாத்திம் திறந்து வைத்தார்.[12]
அங்காசாபுரி ஒலிபரப்பு மையம் கோலாலம்பூர் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. ஏறக்குறையர் 33 ஏக்கர் நிலப்பரப்பில் 10 மாடிகள் கொண்ட கட்டிடமாக உள்ளது.
பின்வரும் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது: