அங்கிடா முடி | |
---|---|
അങ്ങിണ്ട മുടി | |
அங்கிடா பின்னணியில் சிஸ்பரா கணவாய் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,383 m (7,818 அடி) |
ஆள்கூறு | 11°12′26″N 76°27′51″E / 11.20722°N 76.46417°E |
புவியியல் | |
அமைவிடம் | பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு வட்டத்தின் எல்லை மற்றும் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம் |
அங்கிடா முடி (അങ്ങിണ്ട മുടി) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலைச் சிகரம் ஆகும். இதன் உயரம் 2,383 மீட்டர்கள் (7,818 அடி) ஆகும். மேலும் அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவின் மிக உயர்ந்த சிகரம் இதுவாகும். இது சிஸ்பாரா கணவாய்க்கு தெற்கே உள்ளது, மேலும் இது தமிழ்நாட்டின் முக்கூர்த்தி தேசியப் பூங்காவின் தெற்கு எல்லையாக அமைகிறது. சைரந்திரி பார்வையாளர்கள் மையத்தில் உள்ள 30 மீ உயர காட்சிக் கோபுரத்திலிருந்து அங்கிடாவின் தடையற்ற காட்சி காண இயலும்.
அமைதிப் பள்ளதாக்கு தேசிய பூங்காவிற்குள் உள்ள அங்கிடா- சிஸ்பாரா வட்டாரத்தில் அருகிய இனமான நீலகிரி சிரிக்கும் குருவி உள்ளன. முக்காலியில் இருந்து சைரந்த்ரி, பூச்சிபாரா, வாலக்காடு, சிஸ்பாரா வழியாக அங்கிடா வரை 4 நாள் மலையேற்ற பாதையில் செல்லலாம்.
{{citation}}
: Check date values in: |archive-date=
(help)