தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அன்கீத் அனில் சவான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 28 அக்டோபர் 1985 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடது கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | சகலத் துறையர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007–2013 | மும்பை துடுப்பாட்ட அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008 | மும்பை இந்தியன்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012–2013 | ராஜஸ்தான் ராயல்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, 3 சூன் 2012 |
அங்கீத் சவான் (Ankeet Chavan, பிறப்பு அக்டோபர் 28, 1985[1], மும்பை, மகாராட்டிரம், இந்தியா) இந்தியாவின் உள்நாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மும்பைக்காக ஆடுகின்ற ஓர் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1] அனைத்துத் துறை வல்லுநரான இவர் இடக்கை மட்டையாளரும் இடதுகை மரபுவழா சுழல் பந்து வீச்சாளரும் ஆவார். இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.[2].[1]
2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில் இவர் மும்பை அணி சார்பாகா விளையாடினார். டிசம்பர் 12 இல் கட்டாக்கில் நடைபெற்ற ஒடிசா மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்[1]. இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 40 பந்துகளில் 20 ஓட்டங்களை எடுத்து மொஹந்தியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 5 ஓவர்கள் வீசி 1 ஓவரை மெய்டனாக வீசி 27 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பின் பந்துவீச்சில் 11 ஓவர்கள் வீசி 3 ஓவரை மெய்டனாக வீசி 19 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். 2 இலக்கினைக் கைபப்ற்றினார். இந்தப் போட்டியில் மும்பை அணி 315 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3]
2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில் இவர் மும்பை அணி சார்பாகா விளையாடினார். பெப்ரவரி 6 இல் மும்பையில் நடைபெற்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்.[1] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 89 பந்துகளில் 49 ஓட்டங்களை எடுத்து மிதுனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 1 ஓவரை மெய்டனாக வீசி 56 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் சுரேஷ் ரைனா உள்ளிட்ட 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பின் பந்துவீச்சில் 38 ஓவர்கள் வீசி 4 ஓவரை மெய்டனாக வீசி 126 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[4]
2009 ஆம் ஆண்டில் சைஅயது முஷ்தாக் அலி கோப்பைக்கான இருபது20 போட்டியில் மகாராட்டிரம் அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியில் 1 ஓவர்கள் வீசி 17 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். பின் மட்டையாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 2நான்குகளும் 1 ஆறு ஓட்டமும் அடங்கும். இந்தப் போட்டியில் மகாராட்டிரம் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5]
பின் 2013 ஆம் ஆண்டில் புனேவில் நடைபெற்ற போட்டியில் சய்ராட்டிர அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சார்பாக இவர் விளையாடினார். இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 18* ஓட்டங்களை எடுத்தார். பின் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 24 ஒட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.[1]
பின் 2013 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குசராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சார்பாக இவர் விளையாடினார். இந்தப் போட்டியில் 15 ஓட்டங்களை எடுத்தார். பின் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 17 ஒட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.[1]
2013 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். மே 15 இல் இந்தத் தொடரில் 66 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.[6]
மே 16, 2013 அன்று ஐபிஎல் ஆறாம் பருவத்து விளையாட்டில் குறிப்பிட்ட பந்து பரிமாற்றத்தில் முன்கூட்டியே தீர்மானித்தபடி பந்து வீசியதாக குற்றம் சாட்டப்பட்டு இவரையும் இவரது அணித்தோழர்களான சிறிசாந்த் மற்றும் அசித் சாண்டிலாவையும் தில்லி காவல்துறை கைது செய்தது.[7][8]. இவர்கள் மூன்று பேரின் மீதும் இந்தியக் குற்றவியல் சட்டம் 420 மற்றும் 120(பி) கீழ் மும்பை மரைன் டிரைவ் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.[9]
காவல்துறை குற்றச்சாட்டில் இவர் மே 15,2013 அன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஆட்டத்தில் தனது ஒரு பந்துப் பரிமாற்றத்தில் 14 ஓட்டங்கள் கொடுக்க ₹60 இலட்சம் (US$75,000) உறுதி வழங்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.[7][10][11].இவர் பணியாற்றும் நிறுவனமான ஏர் இந்தியா இவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.[12] காவல்துறையின் விசாரணையின்போது தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.[13]
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)