அசரம் | |
---|---|
![]() | |
பிறப்பு | 17 ஏப்ரல் 1941 பெரணி, சிந்து, பிரித்தானியாவின் இந்தியா. |
தீர்ப்பு(கள்) | 2018 கற்பழிப்பு வழக்கு |
தண்டனை | ஆயுள்தண்டனை |
அசரம் | |
---|---|
![]() | |
பிறப்பு | 17 ஏப்ரல் 1941[1] Berani, Sindh, British India |
தீர்ப்பு(கள்) | Rape, 2018 |
தண்டனை | Life imprisonment |
தற்போதைய நிலை | In Prison |
பிள்ளைகள் | Narayan Prem Sai (Son) |
அசுமல் சிருமழனி ஹர்பழனி (பிறப்பு 17 ஏப்ரல் 1941) என்கிற அசரம் ஓர் சர்ச்சைக்குரிய இந்திய சாமியார். தற்போது இவர் ஒரு கற்பழிப்பு வழக்கில் சிக்கி ஆயுள்தண்டனையை அனுபவித்து வருகிறார்.[2][3][4] 1970களின் முற்பகுதியில் பொதுவெளியில் வரத் தொடங்கிய இவர், 2013 ஆம் ஆண்டளவில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 400 க்கும் மேற்பட்ட ஆசிரமங்களை நிறுவியுள்ளார். மேலும் இவரது மத சொற்பொழிவுகளுக்கு அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது.
சட்டவிரோத அத்துமீறல், கற்பழிப்பு மற்றும் வழக்கின் சாட்சியை சேதப்படுத்தியது என்று இவர் மீது பல சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2018 ஏப்ரலில், அசரம் 18 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் நிருபிக்கப்பட்டு குற்றவாளி எனக் அறிவிக்கபட்டார். தற்போது ஜோத்பூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். 2017 ஆம் ஆண்டு டிசம்பர் இல், அசரம் ஒரு போலி சாமியார் என இந்து மதம் முனிவர்கள், துறவிகள் மற்றும் சாதுக்கள் அடங்கிய அகில இந்திய சாதுக்கள் கூட்டமைப்பு அறிவித்தது.[5]
அசரம் லக்ஷ்மி தேவி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் நாராயண் சாய் மற்றும் மகள் பாரதி தேவி. இவர்களின் மகன் நாராயண் சாய் ஆசாரமுடன் பணிபுரிந்தார்.[6][7]