அசர்பைஜானின் உயிரினங்கள் அதன் தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் இயற்கை வாழ்விடங்களை உள்ளடக்கியதாகும்.
அசர்பைஜானின் விலங்குகளின் சின்னமாக கருதப்படுவது கரபக் குதிரை (அசேரி: Qarabağ Atı) ஆகும். இது ஒரு மலை புல்வெளிப் பகுதிகளில் காணப்படும் ஒரு பந்தய மற்றும் பயண குதிரை ஆகும். இது அசர்பைஜானில் மட்டுமே காணப்படும் ஒரு விலங்கு ஆகும். உலகில் காணப்படும் குதிரை இனங்களிலேயே இது ஒரு பழமையான இனமாகும். பண்டைய காலத்தில் இது உருவானதாக கருதப்படுகிறது. இந்த குதிரையானது கரபக் பகுதியில் ஐந்தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. அந்தப் பகுதியைக் குறிக்கும் வகையில் கரபக் குதிரை என்று பெயரிடப்பட்டது.[1]
பல்வேறு வகையான விலங்குகளின் இயற்கை வாழிடமானது இந்த நாட்டுக்குள்ளேயே வேறுபட்டு காணப்படுகிறது. சில உயிரினங்கள் சிறப்பான பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் (ஏரிகள், மலைப்பாங்கான இடங்களில்) காணப்படுகின்றன. அதே நேரத்தில் பிற உயிரினங்கள் நாடு முழுவதும் பரவி காணப்படுகின்றன. உதாரணமாக குருவிகள் நாட்டின் எந்த பகுதியிலும் காணப்படும். ஒட்டுண்ணிகள் நாட்டின் பகுதிகள் முழுவதும் காணப்படுகின்றன. ஊர்தி விலங்குகளின் இயற்கை வாழ்விடங்களை பொறுத்து இவை காணப்படுகின்றன. பாலூட்டிகளில் ஜெய்ரான் சிறுமான்கள் சமவெளிப் பகுதிகளில் காணப்படுகின்றன. காக்கேசிய ஆடுகள் பெரும்பான்மையான காக்கேசிய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன. பெரும்பான்மையான பறவையினங்கள் காடுகளில் காணப்படுகின்றன. சில நீர் பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன. அழிவை ஏற்படுத்தும் பூச்சியினங்கள் வேறுபட்ட விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ளன. அதே நேரத்தில் பிற பூச்சியினங்கள் வரையறுக்கப்பட்ட உயிரிடங்களில் மட்டுமே காணப்படுகின்றன.
அசர்பைஜானில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சரணாலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அசர்பைஜானில் உரோமம் தரும் மற்றும் குளம்புடைய விலங்குகளை காப்பதற்காக வேட்டையாடுதல் சம்பந்தப்பட்ட விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அஜர்பைஜானின் விலங்கு இராச்சியம், அதன் இயற்கை வளாகங்களின் பன்முகத்தன்மை காரணமாக, மிகவும் செழிப்பானதாக உள்ளது.
ஐரோப்பா கண்டத்தில், அஜர்பைஜானில் அதிக பாலூட்டி இனங்கள் உள்ளன எனக் கண்டறியப்பட்டுள்ளது. அஜர்பைஜானில் சுமார் 107 வகையான பாலூட்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தனித்துவமான இனங்கள் ஆகும். இதில், பிரபலமான இனங்களாக, காகசியன் ஆடுகள் மற்றும் மேற்கு-காகசஸ் மஃப்ளோன்கள் உள்ளது. இந்த உயிரினங்கள், நக்கிச்செவன் மற்றும் கிரேட்டர் காகசஸின் மேற்கு சரிவுகளில் பாலகன், கபாலா, சகாதலா மற்றும் இஸ்மாயில்லி பகுதிகளில் வசிக்கின்றன. காகசஸில் உள்ள மிக அரிதான மற்றும் வேகமான உயிரினங்களில் ஜெய்ரான் கெஸல்களும் அடங்கும். அஜர்பைஜானின் ஷிர்வன் மாநிலம், பெண்டோவன் மற்றும் கோர்ச்சே பகுதிகளில் மட்டுமே இந்த இனங்கள் காணப்படுகின்றன.
அற்றுவிட்ட இனங்கள்:
கிழக்கு ஐரோப்பிய முள்ளம்பன்றி, எரினேசியஸ் கோன்கொலர்
வடக்கு வெள்ளை மார்பக முள்ளம்பன்றி, எரினேசியஸ் ருமேனிகோஸ்
நீண்ட காதுகள் கொண்ட முள்ளம்பன்றி, ஹெமிசினஸ் ஆரிட்டஸ்
லெவண்டைன் மோல், தல்பா லெவாண்டிஸ்
குல்டென்ஸ்டெய்டின் ஷ்ரூ, க்ரோசிடூரா குல்டென்ஸ்டெய்டி
இரு வண்ண ஷ்ரூ, குரோசிடுரா லுகோடன்
டிரான்ஸ்காகேசியன் நீர் ஷ்ரூ, நியோமிஸ் ஸ்கெல்கோவ்னிகோவி
வெள்ளை-பல் பிக்மி ஷ்ரூ, சன்கஸ் எட்ரஸ்கஸ்
காஸ்பியன் ஷ்ரூ, க்ரோசிடுரா காஸ்பிகா
இந்த நாட்டின் நன்னீர் படுகைகள் மற்றும் காஸ்பியன் கடல் ஆகியவை 97 வகையான மீன்களைக் கொண்டுள்ளன. அவற்றில் எட்டு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஏழு வகைகள் பரவலாகிவிட்டன. அஜர்பைஜானில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுகெலும்பு இல்லாத உயிரினங்கள் உள்ளன. பெரும்பாலானவை குர் நதி, சுற்றியுள்ள ஏரிகள் மற்றும் மிங்கேசேவிர் நீர்த்தேக்கத்தில் காணப்படுகின்றன. மீன்களில் பெரும்பாலானவை அனாட்ரோமஸ் அல்லது அரை அனாட்ரோமஸ் (இவ்வகை மீன்கள் உப்பு நீரில் வளர்ந்து, முதிர்ச்சியை அடைந்தபின் இனப்பெருக்கம் செய்ய புதிய தண்ணீருக்கு இடம்பெயர்கின்றன). அனாட்ரோமஸ் மீன்களில் மிகவும் மதிப்புமிக்கது சால்மன், ஸ்டர்ஜன், ஸ்டெலேட் ஸ்டர்ஜன் மற்றும் பெலுகா போன்றவை ஆகும். ஆஸ்பியஸ், சால்கல்பர்னஸ் மற்றும் ஈல் ஆகியவையும் அனாட்ரோமஸ் மீன்கள் வகையைச் சார்ந்தவை. ஸ்டர்ஜன் இறைச்சி மற்றும் கேவியர் மீன்கள் மிகவும் மதிப்புமிக்கவையாக உள்ளது. தவிர, அஜர்பைஜானின் நீர் படுகையில் ப்ரீம், சாசன், ரூட்டிலஸ் குட்டம் போன்ற பிற மதிப்புமிக்க மீன் இனங்கள் காணப்படுகிறது. ஹெர்ரிங் போன்ற மீன் இனங்கள் காஸ்பியன் கடலில் மீன் பிடிக்கப்படுகின்றன. 1959 க்குப் பிறகு குர் ஆற்றில் ஏராளமான ஹைட்ரோடெக்னிகல் ஆலைகளை நிர்மாணித்ததன் காரணமாக, நதி நீர் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவதோடு, காஸ்பியன் நீர் மாசுபாடும் மதிப்புமிக்க மீன் இனங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க வழிவகுத்தது. மீன் இருப்புக்களை மீட்டெடுப்பதற்கும், உயிரினங்களில் மீன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் மூன்று ஹேட்சரிகள் எனப்படும் குஞ்சு பொறிப்பான்கள் (குராக்ஸி, அலிபயராம்லி மற்றும் குர் பரிசோதனை ஸ்டர்ஜன் ஹேட்சரி) தொடங்கப்பட்டன. அஜர்பைஜானின் மீன் வளர்ப்பு நிறுவனங்கள் மற்றும் ஹேட்சரிகளில், 20 மில்லியன் ஸ்டர்ஜன்கள், 600 ஆயிரம் சால்மன்கள், 800 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனப்பெருக்கம் செய்கின்றன. 20 மில்லியன் ஸ்டர்ஜன் திறன் கொண்ட ஒரு புதிய ஹேட்சரி 2000 ஆம் ஆண்டில் கைலியில் கமிஷனில் வைக்கப்பட்டது.
அஜர்பைஜான் அவிஃபவுனாவில், சுமார் 60 குடும்பங்களில் இருந்து 363 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், சுமார் 40% இனங்கள் அஜர்பைஜானில் குடியேறின. இருப்பினும் இந்த இனங்களில் 27% பறவை இனங்கள் இங்கு குளிர்காலத்திற்கு மேல், இடம் பெயர்கின்றன. மற்றும் 10% பறவை இனங்கள் இடம்பெயர்வுக்காக இந்த நாட்டின் வழியாக செல்கின்றன. பறவைகளில் மிகவும் அரிதானதாக கருதப்படுகின்ற தங்கக் கழுகு, இங்கு நக்கிச்செவன் போன்ற மலைப்பகுதிகளில் வாழ்கிறது. அஜர்பைஜானில் முத்திரைகள் மற்றும் அட்டைகளில் தங்க கழுகு புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.
அஜர்பைஜானில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த பத்து வகையான நீர்நிலவாழ்வன உயிரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அஜர்பைஜானில் 52 வகையான ஊர்வன வகைகள் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான இனங்கள் ஷாமகி மற்றும் நக்கிச்செவனில் இருக்கும் பாலைவன பகுதிகளில் காணப்படுகின்றன. மேலும், சில வகை உயிரினங்கள், பிற தாழ்நிலங்கள் அல்லது மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன.
அஜர்பைஜானில் மிகவும் வளமான தாவரங்கள் உள்ளன. இந்த நாட்டில் 4,500 க்கும் மேற்பட்ட உயர் தாவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அஜர்பைஜானில் உள்ள தனித்துவமான காலநிலை காரணமாக, தெற்கு காகசஸின் பிற குடியரசுகளின் தாவரங்களை விட இங்கு, தாவரங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. காகசஸ் பகுதி முழுவதிலும் வளரும் தாவர உயிரினங்களில் சுமார் 67% அஜர்பைஜானில் காணப்படுகின்றன.
அஜர்பைஜானின் தாவரங்களின் செழுமைக்கு காரணிகளாக, அதன் பல்வேறு தன்மையும், அதன் இயற்பியல்-புவியியல் மற்றும் இயற்கை-வரலாற்று நிலைமைகள் உள்ளது என்று கருதப்படுகிறது.
ஆல்டியாக் தேசிய பூங்காவில் 90.5% அகலமான காடுகளால் சூழப்பட்டுள்ளது, முக்கிய வகை மரங்கள் இரும்பு மரங்கள், காகசஸ் ஹார்ன்பீம், ஓரியண்டல் பீச் (ஃபாகஸ் ஓரியண்டலிஸ்) மற்றும் பிர்ச் ஆகும்.