அசாம் சாகித்திய சபா (Assam Sahitya Sabha) என்பது அசாமிய மொழியையும், இலக்கியத்தையும் வளர்ப்பதற்காக இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மன்றம் ஆகும். அரசியல் நோக்கமற்றதாகவும் இலாப நோக்கமற்றதாகவும் அசாமின் இந்த இலக்கிய மன்றம் செயல்பட்டு வருகிறது. அசாம் மற்றும் அசாமிய இலக்கியங்களின் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக அசாமில், 1917 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இம்மன்றம் நிறுவப்பட்டது. தற்போது அசாமிலும் அசாம் மநிலத்திற்கு வெளியிலுமாக கிட்டத்தட்ட ஆயிரம் கிளைகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது. அசாம் சாகித்திய சபாவின் மைய்ய அலுவலகம் அசாமின் பண்பாட்டுத் தலைமையகமாகத் திகழக்கூடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க யோர்காட்டு நகரத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் அனைத்து கிளைகளுக்கும் மாவட்ட அலகுகளுக்கும் அவை இருக்கும் பகுதிகளிலேயே தலைமை அலுவலகமும் அமைந்துள்ளது [1].
1826 ஆம் ஆண்டு வரை. அசாம் மாநிலம் முக்கியமாக அகோம் மற்றும் கோச் வம்சத்தினரால் ஆளப்பட்டது. 1826 ஆம் ஆண்டு இந்நகரம் பிரித்தானியர்களின் ஆட்சியின் கிழ் கொண்டு வரப்பட்டது. அவர்களின் செயல்பாட்டால் இந்தியாவின் அரசியல் வரைபடத்தில் ஒரு பகுதியாக அசாம் மாறியது. அன்று முதல் இந்தியாவின் கலாச்சார வரைபடத்தில் அசாம் எப்போதும் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வருகிறது.
எனினும், நவீன அசாம், நவீன அசாமிய மொழி, அசாமிய இலக்கியம் மற்றும் அசாமிய கலாச்சார வரலாறு முதலான அம்சங்களின் தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் இருந்து தொடங்குவதாக கண்டுபிடிக்கப்பட்டது. 1872 ஆம் ஆண்டு முதல், அசாமிய மொழி, இலக்கியம் மற்றும் நவீன காலத்திய கலாச்சாரத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுவதற்காக சில அமைப்புகள் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வகையான முயற்சிகளின் விளைவாக அசாம் சாகித்தய சபா தோன்றியது. 1917 ஆம் ஆண்டில் இச்சபா நிறுவப்பட்டவுடன் அதனுடைய முதல் மாநாடு 1917 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. நவீன அசாமிய இலக்கிய வரலாற்றில் ஒரு பெரிய இடத்தைப் பிடித்த நவீன அசாமிய இலக்கிய வரலாற்றில் ஒரு பெரிய இடத்தைப் பிடித்த பத்மநாத் கோகெயின் பருவா தலைமையில் இம்மாநாடு நடைபெற்றது, இந்நிறுவனத்தின் முதலாவது செயலாளராக சரத் சந்திர கோசுவாமி செயல்பட்டார் [2]. இதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற இடைவெளியில் ஆண்டு மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. பெரும் ஆடம்பரமாகவும் கோலாகலமாகவும் இம்மாநாடு நடத்தப்படுகிறது. பெருமை கொண்ட, மற்றும் உயர் புகழ் எய்திய எழுத்தாளர் ஒருவர் அசாம் சாகித்திய சபாவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அசாம் சாகித்திய சபாவை முறையாக உருவாக்குவதற்கு முன்பே சாகித்திய கந்தாரி பத்மாநாத் கோகெயின் பருவா 1895 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாகாலாந்து மாநிலத் தலைநகர் கோகிமாவில் கோகிமா சாகித்திய சபாவை நிறுவியிருந்தார். பத்மாநாத் கோகெயின் பருவா அச்சபாவின் நிறுவனச் செயலாளராகவும், வங்காளத்தைச் சேர்ந்த மேன்மை பொருந்திய நபின் சந்திர பட்டாச்சார்சி நிருவனத் தலைவராகவும் பதவி வகித்தனர். கோகிமா சாகித்திய சபா நிறுவனத்திற்கென ஓர் அலுவலகக் கட்டிடம் கோகிமா நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்தது. சிவப்பு நிறத்தில் இவ்வலுவலகத்தின் சுவர்கள் பூசப்பட்டிருந்ததால் அந்த அலுவலகம் லால் கார் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பத்மா நாத் கோகெயின் பருவாவின் வாழ்க்கை வரலாற்று நூலான மோர் சுவோரான் என்ற நூலில் இதைபற்றிய குறிப்புகள் உள்ளன. காலஞ்சென்ற கோவிந்த சந்திர பெய்ரா, தான் பகதூர் சோனார், அரிபிரசாத் கோர்க்கா ராய் முதலானோர் கோகிமா சாகித்திய சபாவினால் உருவாக்கப்பட்டா இலக்கிய ஆளுமைகள் ஆவர். அசாம் மாநில அரசு இவர்களின் இலக்கியப் பணியை கவுரவிக்கும் பொருட்டு அவர்களுக்கு இலக்கிய ஓய்வூதியம் வழங்கி சிறப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோகிமா சாகித்திய சபா 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாத நிலையின்படி அப்போதும் சிறப்பாக செயல்பட்டு வந்தது. கோகிமாவிலுள்ள பி. ஆர் இல் பகுதியில் நாகாலாந்து காவலர் குடியிருப்புக்கு எதிரில் ஒரு சொந்தக் கட்டிடம் அமைந்துள்ளது. நாகாலாந்து மாநில அரசு 1978 ஆம் ஆண்டு லால் கார் கட்டிடத்திற்குப் பதிலாக இக்கட்டிடத்தை வழங்கியது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அசாம் சாகித்திய சபாவின் மாநாடுகள் கொண்டாடப்படுகின்றன. அசாம் மாநிலத்திலுள்ள சிவசாகர் பகுதியில் அசாம் சாகித்திய சபாவின் முதல் மாநாடு நடைபெற்றது. இது ஒரு பெரிய இலக்கியத் திருவிழாவாக நடைபெற்றது.. தனித்துவமான நிகழ்வுகள் விழாவில் இடம் பெற்றன. ஆயிரக்கணக்கான மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். மாநிலத்திலுள்ள எழுத்தாளர்கள் அனைவரும் மாநாட்டிற்கு வருகை தந்து மக்களை வரவேற்றனர். அவர்களுடைய கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன [3]. 2000 மற்றும் 2002 ஆம் ஆண்டு வழக்கமாக நடைபெற்ற மாநாடுகள் தவிர்த்து யோகார்ட்டு மற்றும் கல்காசியா நகரங்களில் சிறப்பு அமர்வுகள் நடைபெற்றன [4]. பார்பீட்டா மாவட்டம் பார்பீட்டா சாலையிலுள்ள பிசுவாரத்தினா டாக்டர் புபேன் அசாரிக்கா சம்மானாய் கேத்ராவில் விழா நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டுக்கான சபாவின் மாநாடு நாகௌனிலுள்ள காலியபோரில் நடைபெற்றது [5][6]. 2017 ஆம் ஆண்டுக்கான மாநாடும் பத்மாநாத் கோகெயின் பருவா கேத்ரா அரங்கில் நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது.
அசாம் சாகித்திய சபா பத்திரிகை என்ற பெயரில் அசாம் சாகித்திய சபா ஒரு பத்திரிகையை வெளியிடுகிறது. இப்பத்திரிகையின் முதலவது இதழ் 1927 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. சந்திரகார் பருவா இப்பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் ஆவார்ref name="savifa">Thomas Effinger. "Subject Library South Asia". Savifa.uni-hd.de. Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2013-04-27.</ref>[7].