அஸ்ஸாமிய நாட்டுப் புற நடனங்கள் பிஹு மற்றும் பாகுரும்பா (இவ்விரண்டு நடனங்களும் வசந்த காலத்தில் ஆடப்படும் நடனங்கள் ஆகும்). போர்டால், ஸட்ரியா மற்றும் ஓஜபாலி நடனத்தை உள்ளடக்கியது ஆகும். அஸ்ஸாம் ஆனது பல குழுக்களுக்கு உறைவிடம் ஆகும். அவையாவன மோன்கோலாயிட், இந்தோ - பர்மீஸ், இந்தோ - ஈரானியன், ஆரியன், ராபா, போடோ, கச்சாரி, கார்பி,மைசிங், சோனோவால் கச்சாரிஸ், மிஷ்மி மற்றும் டிவா (லாலங்) ஆகும். இந்த குழுக்களின் கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து அஸ்ஸாமிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளன. அஸ்ஸாம் மாநிலத்தில் வாழும் மக்கள் "அக்ஸொமியா" (அஸ்ஸாமிகள்) என்று அறியப் படுகின்றனர். அநேக பழம்குடியினர் தங்களுக்கென்று மொழிகளை வைத்து உள்ளனர் ஆனாலும் அஸ்ஸாமிய மொழி தான் அஸ்ஸாமின் பிரதான மொழியாகும். [1][2]
அநேக கேளிக்கைகளும் திருவிழாக்களும் அஸ்ஸாமில் நடைபெறுகிறது. அநேகமாக எல்லா பழங்குடி திருவிழாக்களும் வசந்த காலத்தில் தான் நடைபெறும். அஸ்ஸாமின் எல்லா திருவிழாக்களைக் காட்டிலும் பிகு திருவிழாவானது மிகவும் முக்கியமானது ஆகும். இந்த திருவிழா இனம்.மதம்,மொழி அனைத்தையும் கடந்து அஸ்ஸாம் மாநில மக்களை ஒன்றினைக்கிறது.
இந்நடனத்தின் ஆரம்ப மூலம் தெரியாமல் இருந்தாலும் இந்நடனத்தின் முதல் அதிகார பூர்வ குறிப்பு ரோங்காலி பிகுவுக்காக அகோம் மன்னர் ருட்ரா சிங் பிகு நடனம் ஆடுபவர்களை ராங் கார் நிலத்தில் 1964 ஆம் ஆண்டு நடனம் ஆட விடுத்த அழைப்பில் உள்ளது.
பிகு ஒரு குழு நடனம் ஆகும். இதில் ஆண்களும் பெண்களும் இணைந்து நடனம் ஆடுவர் ஆனால் அந்தந்த பாலினத்திற்கு ஏற்றாற் போல் நடன அசைவுகள் இருக்கும். பொதுவாக பெண்கள் நேர்க்கோடு அல்லது வட்டங்கள் உருவாக்கும் வகையில் நடனம் ஆடுவார்கள். ஆண் நடனம் ஆடுபவர்களும் இசைப்பவர்களும் முதலில் மேடைக்கு வருவார்கள் வந்து தங்களின் வரிசையில் நின்று ஒத்து இணைந்து நடனம் ஆடி சில குறிப்பிட்ட வடிவத்தை உருவாக்குவார்கள். பெண்கள் மெடையில் தோன்றும் போது ஆடிக் கொண்டிருக்கும் ஆண்கள் தங்களின் வரிசையை உடைத்து பெண்கள் உடன் கலந்து ஆடுவார்கள் (இவர்கள் தங்களின் வரிசை மற்றும் வடிவத்தின் ஒழுங்கை கடைபிடிப்பதில் கண்டிப்பாக இருப்பார்கள்). இந்நடனம் பொதுவாக குறிப்பிட்ட அங்க ஸ்திதி (தோற்றம்), இடையை, கரங்கள் மற்றும் மணிக்கட்டுகளை ஆட்டுவித்தல், சுழன்று ஆடுதல், குத்த வைத்தல், குனிதல் போன்ற அசைவுகளால் தனியாக அறியப்படுகிறது.
பிகு நடனம் பிகு இசைக்கு ஆடப்படும். இந்நடனத்தில் மிக முக்கிய இசைக்கலைஞர்கள் மேளம் அடிப்பவர் (துலியா) ஆகும். இவர் இரு முகம் கொண்ட மேளத்தை (டோல் – இவரின் கழுத்தில் தொங்க விடப் பட்டிருக்கும்) ஒரு குச்சி மற்றும் ஒரு உள்ளங்கையால் அடித்து இசையை எழுப்புவார். பொதுவாக ஒரு துலியாவிற்கு மேல் நடன நிகழ்ச்சிக்கு இசை எழுப்புவர். ஒவ்வொரு இசைக் கலைஞரும் வேறு வேறு தாளத்தை நடனத்தின் வெவ்வேறு பகுதிகளில் இசைப்பர். இந்த தாளங்களின் தொகுப்பு ஸூஸ் என்று அழைக்கப்படுகிறது. இது பாரம்பரிய முறையாகும். நடனம் ஆடும் இட்த்திற்கு செல்லும் முன்பாக மேளம் அடிக்கும் இசைக் கலைஞர்கள் ஒரு சிறிய எடுப்பான ஒரு தாளத்தை இசைப்பர். ஸூ மாறும் போது மேளம் அடிப்பவர்கள் நடனம் ஆடும் பகுதிக்கு வரிசையாகச் செல்வர். மொஹோர் ஸிஙோர் பெபா (பொதுவாக நடன ஆரம்பத்தில்) ஒரே கலைஞரால் இசைக்கப் படும். இவர் ஒரு எளிய கலையின் முக்கிய கருத்தை மையமாக வைத்து நடனத்த்துக்கு ஒரு திட்ட அமைவை கொடுத்து விடுவார் இது நடனம் ஆடுபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மனநிலையை அமைத்து விடும். அதன் பிறகு ஆண் நடனக் கலைஞர்கள் உள்ளே வருவார்கள் வந்து குறிப்பிட்ட அமைப்பில் ஆட ஆரம்பிப்பார்கள் (பாடிக்கொண்டே ஆடுவார்கள் பாடலில் அனைத்துக் கலைஞர்களும் பங்கு கொள்வர்). இந்த நடனத்தில் பங்கு பெறும் வேறு இசைக்கருவிகள் டால் ஒரு விதமான ஜாலரா, கோகோனா நாண் மற்றும் மூங்கிலால் ஆன இசைக் கருவி, டோகா மூங்கில் மணி மற்றும் களி மண்ணால் செய்யப்பட்ட ஸுறுலி எனும் சீழ்க்கை கருவி ஆகும். மூங்கிலால் ஆன புல்லாங்குழல்களும் அடிக்கடி உபயோகப் படுத்தப் படும். இந்த நடனத்தில் இணைந்து பாடப் படும் அனைத்து பாடல்களும் பரம்பரையாக வழிவழியாக கொடுக்கப் பட்ட பாடல்களாகும்.