அசாம் மோதல்கள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
வட கிழக்கு இந்தியா பகுதி | |||||||
அசாம் மாநிலம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இந்தியா பூட்டான் (Indo-Bhutanese border) வங்காளதேசம் (Indo-Bangladeshi border) | உல்பா KLNLF NDFB |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பிக்ராம்சிங் (31 May 2012-present)
| Paresh Baruah Arabinda Rajkhowa Pradip Gogoi Anup Chetia Raju Baruah Chitrabon Hazarika Ashanta Bagh Phukan Ramu Mech Sashadhar Choudhury Bhimkanta Buragohain Mithinga Daimary Pranati Deka Drishti Rajkhowa Sabin Boro Men Sing Takbi Pradip Terang |
||||||
பலம் | |||||||
3,000-6,000 (1996)[1] 3,500 (2005)[2] 225 (2008)[3] |
|||||||
இழப்புகள் | |||||||
10,000 killed[4] |
அசாம் பிரிவினைவாத இயக்கங்கள் (Assam separatist movements) என்பவை வடகிழக்கு இந்தியாவின் எண்ணெய் வளம் நிறைந்த மாநிலமான[5] அசாமில் செயல்படும் கிளர்ச்சி இயக்கங்கள் ஆகும். இந்த மோதல்கள் 1970 களில் தொடங்கியது, காரணம் அசாமில் அயல் இன மக்களின் மிகுதியான குடியேற்றங்களால் மண்ணின் மைந்தர்களான அசாமிகளுக்கு ஏற்பட்ட பதட்டம், இந்திய அரசாங்கத்திடம் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் தில்லியின் புறக்கணிப்பு .[6][7] போன்றவை ஆகும். இந்த மோதல்களால் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் 12,000 பேரும், 18,000 வேறுபலரும் பேர் கொல்லப்பட்டனர்.[8][9] பெரும்பாலான அசாமிகள் பிரிவினைவாத குழுக்களன்மீது அனுதாபத்துடன் இருந்த போதிலும், பிரிவினைவாத இலக்குகள் மீது மக்கள் பெரும் ஆதரவை அளிக்கவில்லை.[10]
இந்த எழுச்சியால் உல்பா, ஆதிவாசி தேசிய விடுதலை இராணுவம், கார்பி லாங்கி என்.சி.ஹில்ஸ் விடுதலை முன்னணி (KLNLF), போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (NDFB), போன்ற பலவேறு அமைப்புகள் உருவாயின என்றாலும் இந்த அமைப்புகளில் உல்பா மிகப் பெரியது,. மற்றும் பழமையானது ஆகும் உல்பா 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [11] உல்பா இந்தி பேசும் குடியேறி தொழிலாளர்களைத் தாக்கியது.[12] மேலும் அது இந்திய ஒன்றியத்தில் இருந்து விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தது.[13] இந்திய அரசாங்கத்தின் புறக்கணிப்பு மற்றும் பொருளாதார சுரண்டல் என்ற குற்றச்சாட்டுகள் இந்த பிரிவினைவாத இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
இறையாண்மை உடைய அசாமை நிறுவுவதை தனது போராட்டத்தின் நோக்கமாக உல்பா கொண்டுள்ளது. 1990 களில் இந்திய அரசாங்கம் இந்த அமைப்புக்கு தடை விதித்ததுடன், பயங்கரவாதக் குழு என வகைப்படுத்தியது.
உல்பா அமைப்பானது 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று அகோம் பேரரசின் வரலாற்று சிறப்பு மிக்க கட்டமைப்பான ரங்கர் என்ற இடத்தில் துவக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு முதல் உல்பா இந்திய இராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு உட்பட்டது.[14] கடந்த இரண்டு தசாப்தங்களில் போராளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே நடந்த மோதல்களினால் 30,000 பேர் இறந்துள்ளனர். [15] பிரிவினைவாத உணர்வு வலுவாக உள்ளது,[16] மேலும் பிரிவினைவாத இயக்கம் மக்கள் ஆதரவோடும் இயங்கி வருவதால் அது சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது. மேலும், அசாமிய இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் அசாமிய தேசியவாதத்தின் வலியுறுத்தல்கள் காணப்படுகின்றன. அசாமிய மொழி ஊடகங்களில் இந்திய அரசின் புறக்கணிப்பு மற்றும் சுரண்டல் ஆகியவற்றில் இருந்து,[17] பாதுகாப்பவர்கள் உல்பா தலைவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.[18]
சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட அசாமிய எழுத்தாளரான இந்திரா கோஸ்வாமி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடைய மத்தியஸ்தராக பணி ஆற்றி பல வருடங்களாக சமாதானத்தை தக்க வைத்தார் .[19][20][21] [22] இவரது முயற்சிகளால் மக்கள் கலந்தாய்வு குழு என்ற அமைதிக்குழு உருவானது.