அசாம் மாநிலப் பண் (அசாம் மாநிலத்தின் கீதம்) ஓ மோர் ஆபோனார் தேஸ் என்பதாகும். இது லட்சுமிநாத் பெசுபராவ் என்பவரால் இயற்றப்பட்டது. அசாமிய மொழியில் எழுதப்பட்ட இப்பாடல், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பேசப்படும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1][2][3]
அசாமியப் பாடல் (தமிழ் எழுத்துகளில்) |
பாடலின் பொருள்
|
- ஓ’ மோர் ஆபோனார் தேஸ்
- ஓ’ மோர் சிகுணீ தேஸ்
- ஏனேகன் ஸுவலா, ஏனேகன் ஸுபலா
- ஏனேகன் மர்மர் தேஸ்
- ஓ’ மோர் ஸுரீஃயா மாத
- அஸமர் ஸுவதி மாத
- ப்ருதிவீர க(அ)தோ பிசாரி ஜனமடோ
- நோபோவா கரிலேஓ பாத
- ஓ’ மோர் ஓபஜா டாயி
- ஓ’ மோர் அஸமீ ஆயி
- சாயி லஓம் ஏபார முகனி தோமார
- ஹேம்பாஹ மோர் பலோவா நாயி
|
- ஓ, என் பிரியமான தாய்மண்ணே
- ஓ, என் வசீகரமான தாய்மண்ணே
- இனிமையுடைய, வளம் நிரம்பிய
- நெருக்கமும், விருப்பமும் கொண்டுள்ள என் தாய்மண்ணே
- ஓ, என் இனிய குரலே
- அசாமின் மெல்லிசைக் குரல்
- உலகெங்கிலும் தேடினாலும் கிடைக்காது
- வாழ்வில் தேடினாலும் கிடைக்காது
- ஓ, என் பிறப்பிடமே
- ஓ, என் அசாம் தாயே!
- எனக்கு இடம் கொடு, உன் முகத்தைப் பார்
- என் மனம் இன்னும் நிறையவில்லை
|