அசி படித்துறை | |
---|---|
![]() அசி படித்துறையில் காலை நேர ஆரத்தி | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தரப் பிரதேசம் |
ஆள்கூறுகள்: | 25°17′19.132″N 83°0′24.342″E / 25.28864778°N 83.00676167°E |
கோயில் தகவல்கள் |
அசி படித்துறை (Assi Ghat) என்பது வாரணாசியின் தெற்கே அமைந்துள்ள படித்துறை ஆகும்.[1] இது, நீண்ட கால வெளிநாட்டு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலாப் பயணிகள் வசிக்கும் இடமாகும்.[2] துளசிதாசர், இங்கிருந்துதான் தனது பரலோக பிரயாணத்தைத் தொடங்கியதாக இந்துக்கள் நம்புகிறார்கள்.
பெரும்பாலான பயணிகள் பொழுதுபோக்குவதற்கும், பண்டிகைகளின் போதும் அடிக்கடி வருகை தருகிறார்கள். வழக்கமான நாட்களில் ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 300 பேர் காலையில் வருகிறார்கள். பண்டிகை நாட்களில் ஒரு மணி நேரத்திற்கு 2500 பேர் வருகிறார்கள். வழக்கமான நாட்களில் இங்கு வருகை தருபவர்களில் பெரும்பாலோர் அருகிலுள்ள பனாரசு இந்து பல்கலைக்கழக மாணவர்கள். மகா சிவராத்திரி போன்ற பண்டிகைகளின் போது ஒரே நேரத்தில் சுமார் 22,500 பேர் இந்த படித்துறை சந்திக்கிறது.[3]
சுற்றுலாப் பயணிகளுக்கான நிறைய விளையாட்டுகள் உள்ளன. பார்வையாளர்கள் படகு சவாரிகளுக்கு செல்லலாம். அசி படித்துறையின் வான்வழி பார்வைக்கு சூடான காற்று பலூனில் செல்லலாம். மாலையில் தினசரி திறமை நிகழ்ச்சியை ரசிக்கலாம் அல்லது அப்பகுதியில் உள்ள பல உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஒன்றில் சாப்பிடலாம்.
2010 வாரணாசி குண்டுவெடிப்பிற்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்காக கூடுதல் காவலர்கள் இப்பகுதிக்கு நியமித்தது.[4]
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)