பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-(டையீத்தாக்சிபாசுபீனோதயோல்சல்போனைல்மெத்தில்)-1,2,3-பென்சோடிரையசின்-4-ஒன்
| |
வேறு பெயர்கள்
கசாதயோன்; எத்தில் அசின்பாசு
| |
இனங்காட்டிகள் | |
2642-71-9 | |
ChEBI | CHEBI:38587 |
ChemSpider | 16576 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C18644 |
பப்கெம் | 17531 |
வே.ந.வி.ப எண் | TD8400000 |
| |
பண்புகள் | |
C12H16N3O3PS2 | |
வாய்ப்பாட்டு எடை | 345.37 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
உருகுநிலை | 53 °C (127 °F; 326 K)[1] |
தீங்குகள் | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
17.5 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அசின்பாசு-எத்தில் (Azinphos-ethyl) என்பது C12H16N3O3PS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு பல்வீரிய கரிமபாசுபேட்டு பூச்சிக் கொல்லியாகும். அசினோபாசு-எத்தில் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இதன் உருகுநிலை 53 பாகை செல்சியசு ஆகும்[1].
பாலூட்டிகளைப் பொறுத்தவரையில் இது மிகவும் நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாக கருதப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் இதை 1பி என்ற உயர் நச்சு வகைப்பாட்டில் வகைப்படுத்தியுள்ளது [2]. அமெரிக்காவிலும் அவசரகால திட்டமிடல் மற்றும் சமூக தகவல் அறியும் சட்டத்தின் (42.யு,எசு,சி.11002) பிரிவு 302 இன் படி இதை மிகவும் ஆபத்தான ஒரு நச்சுப்பொருள் என வகைப்படுத்தியுள்ளார்கள். எனவே அங்கு இதை உற்பத்தி செய்தல் சேமித்தல், பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன மற்றும் கட்டுப்படுத்தப்படுகின்றன [3].