அசுக்கொட் தொப்பி

அசுக்கொட் தொப்பி என்பது கடினமான, ஆண்கள் அணியும் தொப்பி. தட்டைத் தொப்பியைப் போன்றது எனினும் இதன் கடினத்தன்மையாலும், வளைவான வடிவத்தாலும் அதிலிருந்து வேறுபடுகின்றது. இவ்வகைத் தொப்பி பொதுவாக உரோம அட்டைகளால் அல்லது கம்பளியால் செய்யப்படுகிறது. மாரி காலத்தில் இறுதிப் பகுதியில் இத்தொப்பியை அணிவது வழக்கம். வெதுவெதுப்பான காலநிலை உள்ளபோது அணிவதற்காகப் புல்லால் செய்யப்பட்ட அசுக்கொட் தொப்பிகளும் உள்ளன.

ஒற்றை நிறத்தைக் கொண்ட இவ்வகைத் தொப்பிகளை அணிபவர்கள், தமது உடையின் நிறத்தோடு ஒத்துப்போகத் தக்கதான நிறத்தைத் தெரிவு செய்து அணிவர். தட்டைத் தொப்பிகளில் இருப்பதுபோல் இவ்வகைத் தொப்பிகளில் பட்டுத் துணியாலான உட்புறவுறை கிடையாது. ஆனாலும் இதன் மூடிய வடிவமைப்பினாலும், உரோம அட்டைகளால் செய்யப்பட்டிருப்பதாலும் இதனை அணியும்போது கதகதப்பான சுகம் கிடைக்கிறது. 1900 ஆவது ஆண்டை அண்டிய காலப் பகுதியில் இருந்து இத் தொப்பி புழக்கத்தில் உள்ளது.[1][2]

இதைப் பெரும்பாலும் ஆண்களே அணிவர் எனினும், சில பெண்களும் இதை அணிவதுண்டு. இத் தொப்பி, தோல் முதலிய வேறு பொருட்களாலும் செய்யப்படுவது உண்டு.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lambeth, Cheralyn (25 November 2016). Creating the Character Costume: Tools, Tips, and Talks with Top Costumers and Cosplayers (in ஆங்கிலம்). Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-59796-4.
  2. Woolnough, Richard (June 2013). The A to Z Book of Menswear (in ஆங்கிலம்). The A to Z Book of Menswear. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-897403-25-9.