ஆசுதேசு முகர்ஜி | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கொல்கத்தா, வங்காளம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு | 29 சூன் 1864
இறப்பு | 25 மே 1924 | (அகவை 59)
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | கல்வியாளர் |
துணைவர் | ஜோகமாயா தேவி |
சமயம் | இந்து சமயம் |
அசுதோசு முகர்சி ( Sir Ashutosh Mukherjee 29, சூன் 1864–25 மே 1924) என்பவர் வங்காள கல்வியாளர், நீதிமான், வழக்கறிஞர் மற்றும் கணித நிபுணர் ஆவார். இவரது முழுப் பெயர் அசுதோசு முகோபாத்தியாய என்பது ஆகும்.[1] (anglicised, originally Āśutōṣh Mukhōpādhyāẏa,[1] கணிதத்திலும் தெரியியல் பாடத்திலும் இரண்டு எம் ஏ பட்டங்கள் பெற்ற முதல் மாணவர் என்ற மதிப்பைப் பெற்றவர். 1906 முதல் 1914 வரையிலும் 1921 முதல் 1923 வரையிலும் கொல்கத்தா பல்கலைக் கழகத் துணைவேந்தராகத் தொடர்ச்சியாகப் பதவி வகித்தார்.
1906இல் வங்காள தொழில் நுட்ப நிலையத்தை நிறுவினார்.1914 இல் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் அறிவியல் கல்லூரியையும் தொடங்கினார். ஆசூரா சட்டக் கல்லூரியைத் தொடங்குவதில் ஈடுபாட்டுடன் இருந்தார். 1908 இல் கொல்கத்தா கணிதக் கழகம் இவர் முயற்சியால் நிறுவப்பட்டது. அதன் தலைவராக 1908 முதல் 1923 வரை இருந்தார். 1914 இல் இந்திய அறிவியல் கழகம் தொடங்கப்பட்டபோது தொடக்க நிகழ்ச்சியில் தலைவராக இருந்தார். 1916இல் இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியில் இருந்தபோது அசுதோசு கல்லூரி தொடங்கப்பட்டது.[2][3]
அசுதோசு முகர்சி வங்காளம், ஆங்கிலம் மட்டும் அல்லாமல் பாலி, பிரெஞ்சு, உருசியன் ஆகிய மொழிகளிலும் தேர்ந்தவர். பல விருதுகள் அவர் பெற்றார். 1964 இல் அவர் நினைவைப் போற்றி அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலையை இந்திய அரசு வெளியிட்டது.
இவரது மகன்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜி, பாரதீய ஜனசங்கம் அரசியல் கட்சியை நிறுவியவர்.