அசும்பு கேடயப் பாம்பு | |
---|---|
படம் ஜி. கெ. போர்டு, 1975 | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | யூரோபெல்டிசு
|
இனம்: | யூ. லையூரா
|
இருசொற் பெயரீடு | |
யூரோபெல்டிசு லையூரா (குந்தர், 1875) | |
வேறு பெயர்கள் [2] | |
|
அசும்பு கேடய வால் பாம்பு என்றும் குந்தர் சிறு பாம்பு என்றும் அழைக்கப்படும் யூரோபெல்டிசு லையூரா (Uropeltis liura) யூரோபெல்டிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினமாகும். இந்த சிற்றினம் இந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி.
யூ. லையூரா தென்னிந்தியாவில், மதுரை மற்றும் திருநெல்வேலி மலைகளில், 3,000-5,000 அடி மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது.
யூ. லையூரா பாம்பின் இயற்கையான வாழிடம் காடுகளாகும். ஆனால் இது ஏலக்காய் மற்றும் தேயிலைத் தோட்டங்களிலும் காணப்படுகிறது.
யூ. லையூரா முதுகுப்பகுதி ஊதா கலந்த பழுப்பு நிறத்தில் அடர் நிற செதில்களுடன் காணப்படும். மேலும் சிறிய மஞ்சள் கருப்பு வயிறு மற்றும் பக்கங்களில் பெரிய மாறி மாறி அமைக்கப்பட்ட கருப்பு மற்றும் மஞ்சள் புள்ளிகள் அல்லது குறுக்குப்பட்டைகள் காணப்படும். முதிர்ச்சியடைந்த பாம்பின் மொத்த நீளம் 32 செ.மீ. வரை இருக்கும். முதுகுப் பகுதிச் செதில்கள் தலைக்குப் பின்னால் 19 வரிசைகளிலும், நடுப்பகுதியில் 17 வரிசைகளிலும் உள்ளன. வயிற்றுப் பகுதியில் 174-188 எண்ணிக்கையிலும் வாலடிச் செதில்கள் 8 முதல் 12 வரை காணப்படும்.[3]
மூக்கு முனை ஓரமாகக் குறுகிக் காணப்படும். நாசி செதில் தலையோட்டிலிருந்து சுமார் 1⁄3 நீளமும், மேலே இருந்து தெரியும் வகையிலும் இருக்கும்.
யூ. லையூரா 30 செமீ (12 அங்குலம்) ஆழம் வரை புதைந்து காணப்படும்.[1]
யூ. லையூரா என்பது உள்பொரி முட்டையிடும் பாம்பு ஆகும்.[2] இளம் குட்டிகள் மே அல்லது சூன் மாதங்களில் பிறக்கின்றன. ஒரு முறை நான்கு முட்டைகள் இடுகின்றன.[4]