அசுவதி பிள்ளை | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | ||||||||||||||
நேர்முக விவரம் | ||||||||||||||
பிறப்பு பெயர் | அசுவதி வினோத் பிள்ளை | |||||||||||||
நாடு | ![]() | |||||||||||||
பிறப்பு | 14 சூலை 2000[1] தக்கலை, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா[2] | |||||||||||||
வசிக்கும் இடம் | ஸ்டாக்ஹோம், சுவீடன்[2] | |||||||||||||
உயரம் | 172 cm (5 அடி 8 அங்) | |||||||||||||
எடை | 63 kg (139 lb) | |||||||||||||
கரம் | வலக்கை ஆட்டக்காரர் | |||||||||||||
பயிற்சியாளர் | ரியோ வில்லியன்டோ[1] | |||||||||||||
மகளிர் ஒற்றையர்& இரட்டையர் பிரிவு | ||||||||||||||
பெரும தரவரிசையிடம் | 215 (WS 10 May 2018) 400 (WD 5 July 2018) | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||
இ. உ. கூ. சுயவிவரம் |
அஸ்வதி வினோத் பிள்ளை (பிறப்பு: ஜூலை 14, 2000) இந்தி இந்தியாவின் கன்னியாகுமரியியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சுவீடிசியத் தொழில்முறை இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். அவர் ஐரோப்பா முழுவதும் பல தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் இளைஞர் ஒலிம்பிக்கில் சுவீடனுக்காக விளையடிய முதல் இந்தியராகவும் உள்ளார். 2018 கோடைகால இளைஞர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஆல்பா அணியின் ஒரு குழுவில் இடம்பெற்றவர்.
அசுவதியின் பெற்றோர் காயத்ரி மற்றும் வினோத் பிள்ளை ஆவர். தமிழ்நாட்டிலுள்ள தக்கலை என்ற ஊருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்துவருகிறார்.[3] அவள் ஒரு சகோதரன், ஒரு சகோதரன்.[4] அவர் பெங்களூருவின் தேசிய பொதுப் பள்ளியில் 4ஆம் வகுப்பு வரை படித்து வந்தார்.[5]
சிறுவயதில் தனது தந்தை தன் நண்பர்களோடு விளையாடுவதைப் பார்த்த அசுவதி இறகுப்பந்தாட்டத்தில் ஆர்வம் கொண்டார். [4] 2009 ஆம் ஆண்டில், இவரது குடும்பம் தந்தையின் தொழில்முறை தேவைகள் காரணமாக சுவீடனுக்கு இடம்பெயர்ந்தது. சுவீடனில் இருந்த சமயத்தில், அவர் இங்கிலீஷ்கா சுகோலன் தேசியப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார்.[6] 12 வது வகுப்பில், அவர் கணிதம்மற்றும் உயிரியல் கல்வி கற்றார்.[4] அவர் கரோலினா மரின் என்பவரைத் தனது விளையாட்டு மதிரியாகக் கொண்டவர்.[6]
அசுவதி ஏழு வயதில் இறகுப்பந்தாட்டம் விளையாடத் தொடங்கினார் சுவீடன் சென்ற பிறகும் பயிற்சியை நிறுத்த விரும்பாமல் தொடர்ந்து பயிற்சி பெற்றார். பயிற்சியாளர் ரியோ வில்லியோட்டோவின் கீழ் டேபீ இறகுப்பந்தாட்டக் கழகத்தில் இணைந்துகொண்டார் மேலும் உப்ஸ்பாலாவில் பயிற்சியாளரான ஆண்டர்ஸ் கிறிஸ்டியன்சன் என்பவரின் தேசியப் பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.[3] இந்தியாவில் பெங்களூருவில் அகாடமியில் பிரகாஷ் பாதுகோன் என்பவரிடம் பயிற்சி பெற்றார். ஒவ்வொரு ஆண்டும் மூன்று வாரங்களுக்கு, விமல் குமார் மற்றும் யூசுப் ஜோஹரி ஆகியோரால் அசுவதிக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.[5] சுவீடிசிய தேசிய விளையாட்டு கூட்டமைப்பிலிருந்து உடல் பயிற்சியாளர்களால் பயிற்றுவிக்கப்பட்டார். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் மூன்றரை மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.[3]
அசுவதி பல்வேறு ஐரோப்பிய எட்டு நாடுகள் முதலான தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் டேனிஷ் ஜூனியர் இண்டர்நேஷனல், கிளாஸ்கோ இளையோர் தேசியப் போட்டிகள் மற்றும் ஹெல்சிங்கியில் ஃபின்ம்கம்பேன் போன்ற பல தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பில்லில் கலந்து கொண்டார். பின்னர், தேசிய ஜிம்னாசிய இறகுப்பந்தாட்டக் கழகத்தின் இணைத்துக்கொள்ளப்பட்டார்.[6]
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் அசுவதியின் சாதனைகள் பின்வருமாறு:
2012-2013 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மகளிர் இளையோருக்கான பிரிவில் பெருமைபெற்ற வீரர் விருதினைப் பெற்றார். மேலும் இவருக்கு இதற்கானப் பணப்பரிசும் வழங்கப்பட்டது.[6] 2013 ஆம் ஆன்டில் பென்க் எரிக் ஹோஜர்ஸ் உதவித் தொகையும் பரிசளிப்பு பணத்தையும் பெற்றார்.[6]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help) பரணிடப்பட்டது 2019-01-26 at the வந்தவழி இயந்திரம்