அசோக் குமார் ராவத் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2004-2014, 2019, 2024-முதல் (4ஆவது முறை) | |
தொகுதி | மிசிரிக் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 நவம்பர் 1975 கார்தோய், உத்தரப் பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | இலக்னோ, தில்லி |
வேலை | அரசியல்வாதி |
As of 23 June, 2019 |
அசோக் குமார் ராவத் (Ashok Kumar Rawat) என்பவர் (பிறப்பு நவம்பர் 26,1975) இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் ஆவார். இவர் தற்போது உத்தரப்பிரதேசத்தின் மிசிரிக் மக்களவைத் தொகுதியிலிருந்து நான்காவது முறையாக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக பணியாற்றுகிறார். இவர் 2019ஆம் ஆண்டு இந்திய மக்களவைப் பொதுத் தேர்தலில், பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு தனது நெருங்கிய பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். முன்னதாக, இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினராக இரண்டு முறை பணியாற்றியுள்ளார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தாலும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. 15ஆவது மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளின் எண்ணிக்கையில் ராவத் தனது முன்மாதிரியான செயல்திறனுடன் 3ஆவது இடத்தில் உள்ளார்.
ராவத் 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் மிசிரிக் மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார். இந்தக் காலகட்டத்தில், பொதுக் கணக்குக் குழு, பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் நலக் குழு, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் குழு போன்ற பல்வேறு குழுக்களில் உறுப்பினராக பணியாற்றினார்.[1] 15வது மக்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் நலக் குழுவின்[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினராகவும், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் குழுவின்[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினராகவும் பணியாற்றினார்.[தொடர்பிழந்த இணைப்பு][2]
2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட இவர், ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[3]
2024 மக்களவை பொதுத் தேர்தலில் ராவத் 37,810 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் சமாஜ்வாதி கட்சியினைச் சேர்ந்த சங்கீதா ராஜ்வான்சியை தோற்கடித்தார்.[4][5]