அஞ்சல | |
---|---|
தயாரிப்பு | திலிப் சுப்பராயன் |
கதை | தங்கம் சரவணன் |
இசை | கோபி சுந்தர் |
நடிப்பு | விமல் நந்திதா (நடிகை) ரித்விகா பசுபதி |
ஒளிப்பதிவு | ரவி கண்ணன் |
படத்தொகுப்பு | பிரவீன் கே. எல் |
கலையகம் | திலிப் சுப்பராயன் |
விநியோகம் | ஆரா சினிமாஸ் |
வெளியீடு | 12 பிப்ரவரி 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அஞ்சல (Anjala) தங்கம் சரவணன் இயக்கத்தில் 2016இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1] திலிப் சுப்பராயன் படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் விமல் மற்றும் நந்திதா ஆகிய இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2]
பாடல் காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தவர்கள் :
விமல், நந்திதா மற்றும் பசுபதி நடித்திருக்கும் "அஞ்சல" படத்தின் தயாரிப்பு வேலைகள் திசம்பர் 2013இல் ஆரம்பிக்கப்பட்டது. இதை திலீப் சுப்பராயன் தயாரித்துள்ளார். இப் படத்தின் ஒளிப்பதிவை ரவி கண்ணனும், படத்தொகுப்பை பிரவீண் ஸ்ரீகாந்த்தும் செய்துள்ளனர். இதற்கு இசை அமைத்தவர் கோபி சுந்தர். திலீப்பின் தந்தை சூப்பர் சுப்பராயன் இப் படத்தின் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்.[3]
இப் படத்திற்கு இசை அமைத்தவர் கோபி சுந்தர். இப் படத்தின் பாடல்களை நா. முத்துக்குமார், யோகபாரதி, கங்கை அமரன், ஏகாதசி மற்றும் லலிதானந்த் எழுதியுள்ளனர். 'பிகைண்ட்வுட்ஸ்' இணையதளம் இப்படத்தின் பாடல்களுக்கு 5க்கு 2.75 புள்ளிகள் கொடுத்துள்ளது.[4]
Track listing | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடியவர்கள் | நீளம் | |||||||
1. | "நக்கலு மாமா" | நந்தா, சந்தோஷ் ஹரிகரன், பூஜா ஏவி, சாய், அழகேசன், தமிழ் & முத்துசாமி | 5:12 | |||||||
2. | "கண்ஜாடை" | வி. வி. பிரசன்னா, வந்தனா சீனிவாசன் | 4:54 | |||||||
3. | "யாரை கேட்பது" | கங்கை அமரன் | 4:50 | |||||||
4. | "அய்யன்குழி" | முகேஷ், தமிழ், தல முத்து, ராஜா, கருப்பன் & பிச்சை அரசன் | 4.47 | |||||||
5. | "டீ போடு" | தேவா | 4:26 |
"டைம்ஸ் ஆஃப் இந்தியா" இத் திரைப்படத்திற்கு 5க்கு 3 புள்ளிகளை வழங்கியது. மேலும், இப் படம் சீராக எடுக்கப்படவில்லை எனவும், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் எனவும் விமர்சித்தது.[5] "தி இந்து" பத்திரிகை, 'அஞ்சல' படத்தின் ஆரம்பக் காட்சிகள் மிகவும் அருமையாக உள்ளது எனவும், திரைக்கதையை கொண்டு சென்ற பாங்கு சரியில்லை எனவும் விமர்சித்தது.[6] 'அஞ்சல' படத்தின் கருப்பொருள் தனித்தன்மையாக இருந்தாலும், அதன் திரைக்கதை மற்றும் கையாண்ட முறை விரும்பத்தக்கதாக இல்லை என "இந்துஸ்தான் டைம்ஸ்" விமர்சித்தது.[7] "மூவி குரோ" தனது விமர்சனத்தில் 'அஞ்சல' ஒரு சிறந்த முயற்சி எனக் குறிப்பிட்டுள்ளது.[8]