'அஞ்சலோ பெரேரா (ஆங்கிலம்: Angelo Perera) 1990 பிப்ரவரி 23 அன்று பிறந்த இலங்கை மொறட்டுவைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 23 முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10-2010/11பருவ ஆண்டில், இலங்கை நொன்டர்ஸ் கிரிப்ஸ் விளையாட்டுக் கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார். ஒரு தொழில்முறை இலங்கையின் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட வீரர் ஆவர்
ஒரு தொழில்முறை இலங்கையின் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட வீரர் ஆவர். அவர் ஒரு வலது கை துடுப்பாட்ட வீரர் மற்றும் இடது கை மெதுவான பந்து வீச்சாளர் ஆவார். அவர் நான்டெஸ்கிரிப்ட்ஸ் துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார். கொழும்பு செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரியில் பயின்றார். 2019 ஆம் ஆண்டில், எந்தவொரு முதல் வகுப்பு போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் இரட்டை சதங்களை அடித்த ஆர்த்தர் ஃபாக் என்ற வீரருக்குப் பிறகு அவர் இரண்டாவது வீரராக ஆனார்.
2007 ஆம் ஆண்டில் வங்காளதேசத்தில் 19 வயதிற்குட்பட்டோர் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் பெரேரா அறிமுகமானார், பின்னர் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடினார். 2007-08 இல் 19 வயதிற்குட்பட்டோர் துடுப்பாட்ட அணி உலகக் கோப்பையில் இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும், இரண்டு போட்டி ஆட்டங்களிலும் விளையாடிய அவர், இரண்டு இன்னிங்ஸ்களில் 9 ஓட்டங்களே எடுத்தார்.
2007-08 ஆம் ஆண்டில் மாகாணங்களுக்குள் இருபதுக்கு -20 போட்டியில் இலங்கை பள்ளிகளுக்காகவும், அடுத்த பருவத்தில் மீண்டும் விளையாடினார். 2009 ஆம் ஆண்டில் வங்காளதேசத்திற்கு எதிராக இலங்கைக்கு திரும்பிய சுற்றுப்பயணத்தில் பெரேரா மேலும் இரண்டு 19 வயதுக்குட்பட்ட தொடர் போட்டிகளிலும் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றார். பெரேரா 2009-10 ஆம் ஆண்டில் பதுரெலியா ஸ்போர்ட்ஸ் அணிக்கு எதிராக அறிமுகமானார். அதில் மூன்று விக்கெட்ட்களை வீழ்த்தி தன்து அணிக்கு வெற்றி ஈட்டுத் தந்தார்.
பெரேரா 2009-10 ஆம் ஆண்டில் பதுரெலியா விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக முதல் தர அணியில் அறிமுகமானார். நான்டெஸ்கிரிப்ட்ஸ் துடுப்பாட்ட அணிக்குள், பெரேரா இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக 244 ஓட்டங்கள் எடுத்தார். இந்த போட்டியில் அவரும் ஜெகான் முபாரக்கும் கூட்டாக இணைந்து எடுத்த ஓட்டங்கள் 405 இலங்கை மண்ணில் நடந்த முதல் தர போட்டியில் நான்காவது விக்கெட்டுக்கான அதிகபட்ச கூட்டாண்மை ஆகும். பெரேரா தனது ப்ங்காக 30 தடவை எல்லைக்கோட்டிற்கு பந்தை தட்டிவிட்டார். ம்ற்றும் ஆறு முறை எல்லைக்கோட்டிற்கு வெளியே த்ட்டி விட்டார். அதற்கு 204 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டது, மேலும் இது அவரது அதிகபட்ச முதல் தர விளியாட்டின் ஓட்டங்கள் ஆகும்[1]
மார்ச் 2018 இல், அவர் 2017–18 சூப்பர் நான்கு மாகாண போட்டிகளுக்கான கொழும்பு அணியில் இடம் பெற்றார்.[2][3] அடுத்த மாதம், 2018 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான கொழும்பு அணியிலும் அவர் இடம் பெற்றார். [4] ஆகஸ்ட் 2018 இல், காலியின் அணியில் 2018 எஸ்.எல்.சி டி 20 லீக்கில் அவர் இடம் பெற்றார்.[4]
பிப்ரவரி 2019, 2018–19 பிரீமியர் லீக் போட்டியில் சூப்பர் எட்டு போட்டிகளின் இறுதி சுற்றில், பெரேரா ஒவ்வொரு இன்னிங்ஸிலும் இரட்டை சதம் அடித்தார்.[5] இது 1938 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த கவுண்டி சாம்பியன்ஷிப்பில் எசெக்ஸுக்கு எதிராக கென்டிற்காக ஆர்தர் ஃபாக் என்பவரால் முதல் தர துடுப்பாட்டத்தில் ஒரு முறை மட்டுமே அடிக்கப்பட்டது.[6] மார்ச் 2019 இல், அவர் 2019 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான கொழும்பு அணியில் இடம் பெற்றார்.[7]
பெரேரா 2013 ஆம் ஆண்டில் வங்காள தேசத்திற்கு எதிராக தனது இருபது20 போட்டியில் அறிமுகமானர். அதே ஆண்டில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பல்லேகேல் முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். பல ஏற்ற தாழ்வுகளுக்குப் பிறகு, ஆத்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணிக்கு பெரேரா அழைக்கப்படார். அங்கு அவர் தம்புல்லாவில் நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[8]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)