2016 ஆம் ஆண்டில் அஞ்சும் மௌத்கில் | ||||||||||||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறந்த பெயர் | அஞ்சும் மௌத்கில் | |||||||||||||||||||||||||||||||
தேசியம் | இந்தியன் | |||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 5 சனவரி 1994[1] சண்டிகர், இந்தியா[1] | |||||||||||||||||||||||||||||||
உயரம் | 165 செ.மீ[1] | |||||||||||||||||||||||||||||||
எடை | 69 கி.கி[1] | |||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | குறி பார்த்துச் சுடுதல் | |||||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | காற்றுத் துப்பாக்கி | |||||||||||||||||||||||||||||||
பல்கலைக்கழகம் அணி | பஞ்சாப் பல்கலைக்கழகம் | |||||||||||||||||||||||||||||||
அணி | இந்திய அணி | |||||||||||||||||||||||||||||||
பயிற்றுவித்தது | தீபாலி தேசுபான்டே[1] | |||||||||||||||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||||||||||||||||||||
மிகவுயர் உலக தரவரிசை | உலகத் தரவரிசை எண் 2 (10மீ காற்றுத் துப்பாக்கி) | |||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
அஞ்சும் மௌத்கில் (Anjum Moudgil) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். 1994 ஆம் ஆன்டு சனவரி மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சண்டிகர் நகரைச் சேர்ந்த இவர் பஞ்சாபைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[2][3][4][5]
சண்டிகரில் உள்ள தூய நெஞ்ச மூத்தோர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே அஞ்சும் துப்பாக்கி சுடத் தொடங்கினார்.[6] சண்டிகரின் டி.ஏ.வி கல்லூரியில் வாழ்வியல் புலத்தில் பட்டப்படிப்பும் முதுகலைப் படிப்பும் முடித்தார்.[7] விளையாட்டு உளவியலில் பாடத்திலும் முதுகலை படித்து முடித்தார். இவர் ஒரு தீவிரமான படைப்புக் கலைஞராவார். இவரது பல கலைப்படைப்புகளை விற்பனை செய்துள்ளார்.
சாங்வோனில் நடந்த பன்னாட்டு குறி பார்த்து சுடுதல் கூட்டிணைவு உலக வெற்றியாளர் போட்டியில் பெண்கள் 10 மீ காற்றுத் துப்பாக்கிப் போட்டியில் அஞ்சும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[8]
24 வயதான அஞ்சும் மதிப்புமிக்க போட்டிகளில் இந்திய மூத்தோர் அணியின் பதக்கக் கணக்கைத் திறக்க எட்டு இறுதிப் போட்டிகளில் மொத்தம் 248.4 புள்ளிகளை எடுத்துள்ளார்.[9]
மியூனிக்கில் நடைபெற்ற 2016 உலகக் கோப்பையில் 9 ஆவது இடமும் உலக பல்கலைக்கழக வெற்றியாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றார்.
இவர் 10 மீ காற்றுத் துப்பாக்கி போட்டியில் சர்தார் சாசன் சிங் சேத்தி நினைவு வல்லுநர்கள் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மெக்சிகோவில் நடந்த பன்னாட்டு துப்பாக்கி சுடும் கூட்டிணைவு உலகக் கோப்பையில் பெண்கள் 50 மீ துப்பாக்கி 3 நிலைகள் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 455.7 புள்ளிகள் எடுத்து அஞ்சும் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். தகுதி சுற்றில் 589 புள்ளிகள் எடுத்து இவர் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட சாதனையை குறிப்பிடத்தக்க வித்தியாசத்தில் முறியடித்தார்.
2019 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாளன்று 10 மீ காற்றுத் துப்பாக்கி வகை சுடுதலில் உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[3][10] மகளிர் 50 மீ 3 நிலை வகையில் இந்தியாவின் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கான அருச்சுனா விருதுக்கு இந்திய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 விளையாட்டு வீரர்களில் அஞ்சுமும் ஒருவராவார்.[11]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)