அடய் என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு ககான் ஆவார். இவர் 1425 - 1438இல் ஆட்சி புரிந்தார். முக்கியமான கிழக்கு மங்கோலிய வேந்தரான அருக்தை தனது கூட்டணியை இவருக்கு வழங்கியதற்குப் பிறகு தன் பதாகையின் கீழ் பெரும்பாலான மங்கோலியப் பழங்குடியினரைக் குறுகிய காலத்திற்கு அடய் மீண்டும் ஒன்றிணைத்தார்.
அடயின் குடும்பத்தின் பரம்பரைப் பூர்வீகமானது கதான் மற்றும் கசருக்கு இட்டுச் செல்கிறது. போர்சிசின் இனத்திற்குள் குடும்பங்களுக்கு இடையிலான திருமண பந்தங்களால் இது இவ்வாறு இட்டுச் செல்கிறது. மங்கோலிய நூல்கள் ஒருக் தெமூர் கானின் ஒரு மகன் அடய் என்று மேலும் குறிப்பிடுகின்றன.[1][2] அடயின் குடும்பமானது கிழக்கு மங்கோலிய இனங்களின் ஓர் உறுப்பினரான கோர்ச்சின் இனமாகும். இவர்கள் பெரிய கிங்கான் மலைத்தொடருக்குக் கிழக்கே நென் ஆற்றுப்பகுதியில் பூர்வீகத்தைக் கொண்டிருந்தனர். இவர் ககானாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே ஒயிரட்களைத் தோற்கடித்ததன் மூலம் மேற்கு மங்கோலிய நிலப்பரப்பை ஒன்றிணைப்பதில் கிட்டத்தட்ட வெற்றி பெற்று விட்டார். மற்றொரு செங்கிஸ் கானின் எழுச்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டதால் பீதியடைந்த மிங் அரசமரபு ஒயிரட்களுக்கு ஆதரவளிக்கத் தொடங்கியது. ஒயிரட்களுக்கும், மேற்கு மங்கோலிய இனங்களின் மத்தியில் இருந்த அவர்களது கூட்டாளிகளுக்கும் ஆதரவளிக்கத் தொடங்கியது. இதன் மூலம் வெற்றிகரமாகச் சண்டைகளின் போக்கை ஒயிரட்கள் திருப்பினர். முதலில் தங்களை மீட்டுக் கொண்டதற்குப் பிறகு, கிழக்கு மற்றும் நடு மங்கோலிய இனங்களுக்கு எதிராகப் பதில் தாக்குதல்களைத் தொடங்கினர்.
கசரின் குடும்பத்துடன் யு விவகாரத்தை விவாதித்ததற்குப் பிறகு அருக்தை சிங்சாங் மகா யுவானின் ககானாக அரியணையில் அடயை அமர வைத்தார்.
இவரது ஆட்சியின் போது அடயால் தனது சக்தியை நிலை நிறுத்தவும், விரிவாக்கவும் முடிந்தது. 1425இல் இறுதியாக நடு மற்றும் கிழக்கு மங்கோலிய நிலப்பரப்புகளை அடய் ஒன்றிணைத்தார். எனினும், மேற்கு மங்கோலிய நிலப்பரப்பில் இவரது வெற்றியானது ஒயிரட்களால் தடுக்கப்பட்டது. இரு பிரிவினரும் தசாப்தங்களுக்கு ஒன்றிணைக்கும் போர்களைத் தொடர்ந்தனர். நடு மற்றும் கிழக்கு மக்களின பரப்புகளை ஒன்றிணைத்ததன் வெற்றியைக் கொண்டு 1425இல் நடு மற்றும் கிழக்கு மங்கோலிய இனங்களின் ஆதரவுடன் ககான் என்று அடய் அறிவிக்கப்பட்டார். அதே ஆண்டு, மேற்கில் இவரது எதிரி கானான ஒயிரடை கொல்லப்பட்டார். அடய் மற்றும் அருக்தை ஒயிரட்களை நொறுக்கினர். அவர்களின் தலைவர்களில் பெரும்பாலானவர்களைக் கொன்றனர். ஒயிரட் உயர்குடியினரைப் பிடித்ததற்குப் பிறகு ஒருக் தெமூர் கானின் மனைவியாகிய அழகிய ஒல்ஜெயிடுவை அடய் திருமணம் செய்து கொண்டார். ஒல்ஜெயிடு எல்பெக் நிகுலேசுக்சி கானின் (ஆ. 1392–1399) ஒரு மனைவியாக இருந்தார். மேலும், அடய் பகாமுவின் மகனான எதிர்கால தோகன் தைசியையும் அடிமைப்படுத்தினார். அடயின் சக்தியானது மேற்கு மங்கோலியர்களை முழுவதுமாக அடையவில்லை என்றாலும், மேற்கு மங்கோலிய இனங்கள் தங்களுக்கென சொந்தமாக ஒரு கானைக் கொண்டிருக்கவில்லை. எனவே, அடய் கான் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு ஒரு தன்னந்தனி மங்கோலிய ஆட்சியாளராக தொடர்ந்தார். மேற்கு மங்கோலியர்கள் முதன்மையான ஆட்சியாளராக அடயை அங்கீகரிக்கவில்லை. இவ்வாறாக, தன்னந்தனி மங்கோலிய ஆட்சியாளராக பெயரளவிலாவது இவர் நீடித்தார். எல்பெக்கின் மகளும், ஒயிரட் தைசி பகாமுவின் விதவையுமான சாமர், கானைத் தமது மகனை விடுவிக்குமாறு இணங்க வைத்தார். அம்மகனுக்கு தற்போது தோகன் என்று பெயரிடப்பட்டது. மேற்கு மங்கோலியாவிற்கு அவரை விடுவிக்குமாறு அவர் இணங்க வைத்தார். எனினும், 1433இல் தோகன் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தினார். மேற்கு மங்கோலியர்கள் இறுதியாக தொக்தோவா புகாவுக்கு மகுடம் சூட்டினர். அவருக்குத் தயிசுங் கான் என்று பட்டத்தைக் கொடுத்துத் தங்களது அடுத்த கானாக மகுடம் சூட்டினார். எதிரெதிர் மங்கோலிய இனங்களால் ஆதரிக்கப்பட்ட இரு கான்கள் ஒரே நேரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு இருப்பதற்கு இது வழி வகுத்தது.
1422 மற்றும் 1423இல் இரண்டு தீர்க்கமான படையெடுப்புகளுக்குப் பிறகு அடய் கான் தான் முன்னர் பெற்ற அனைத்து நிலப்பரப்புகளையும் இழந்தார். 1430இல் மூன்றாவது ஒயிரட் வெற்றியானது இவரது முக்கிய வலிமையை இழக்கச் செய்தது. இதற்குப் பிறகு அடயால் எந்த ஓர் ஆற்றல் நிறைந்த தாக்குதல்களையும் தொடங்க இயலவில்லை. இதற்குப் பிறகு இவர் தற்காப்பில் ஈடுபடும் நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டார். இரு பிரிவினரும் இந்த சமாதான நிலையை அடுத்த கட்டச் சண்டைக்குப் பயன்படுவதற்குத் தயார் செய்தனர். முந்தைய இழப்புகளிலிருந்து அடய் கானால் மீள இயலவில்லை. ஒயிரட்கள் சீக்கிரமே மற்றொரு தொடர் தாக்குதல்களைத் தொடங்கினர். 1434இல் நான்காவது தீர்க்கமான ஒயிரட் வெற்றிக்குப் பிறகு அடய் கானின் முதன்மை ஆலோசகர்களான அருக்தையும், பிறரும் கொல்லப்பட்டனர். அடய் கானின் வீழ்ச்சியானது நடந்தே தீரும் என்ற நிலை உருவானது.
1438இல் எஜேனே என்ற இடத்தில் ஒயிரட்களாலும், அவர்களது கூட்டாளிகளாலும் இவரது நிலப்பரப்பானது தாக்குதல் ஓட்டத்திற்கு உள்ளானது. அதற்குப் பிறகு அடய் கான் தோற்கடிக்கப்பட்டார். செங்கிஸ் கானின் கல்லறையில் அடய் தஞ்சமடைந்தார். எனினும், இவரிடம் ஆயுதம் இல்லாதால் ஒயிரட்டின் தோகூன் தைசி இவரைக் கொன்றார்.[3]