அடுக்குக் கவசம் (ஆங்கிலம்: Laminar armour, லேமினார் ஆர்மர்; இலத்தீன்: Lamina, லேமினா - அடுக்கு) என்பது பின்னல் கவசம்போல் தனித்தனி சிறிய தட்டுகளை பின்னிக் கட்டாமல், கனமான கவச தகடுகளை ஒன்றின்மீது ஒன்றாக வைத்து செய்யப்படும் ஒரு வகை கவசமாகும்.[1] பிரபல உதாரணமாக லோரிக்கா செக்மெண்டேட்டா[2] மற்றும் குறிப்பிட்ட சில சாமுராய் கவசங்கள்.