அட்ராங்கி ரே | |
---|---|
இயக்கம் | ஆனந்த் எல். ராய் |
தயாரிப்பு |
|
கதை | ஹிமான்சு சர்மா |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பங்கஜ் குமார் |
படத்தொகுப்பு | ஹேமால் கோத்தாரி |
கலையகம் |
|
விநியோகம் | ஹாட் ஸ்டார் |
வெளியீடு | 24 திசம்பர் 2021 |
ஓட்டம் | 137 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
அட்ராங்கி ரே (Atrangi Re) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய இந்தி மொழி காதல் நாடகத் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தை இமான்சு சர்மா எழுதி ஆனந்த் எல். ராய் இயக்கியுள்ளார். டி-சீரிஸ், கலர் யெல்லோ புரொடக்சன்ஸ் மற்றும் கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகான் மற்றும் தனுஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சஜ்ஜாத் (அக்ஷய் குமார்) என்ற மனிதனைக் காதலிக்கும் ரிங்கு (சாரா அலி கான்) என்ற தொடர்ந்து வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் கதையை இந்தப் படம் சொல்கிறது. இந்தப் பெண் ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட விசுவை (தனுஷ்) வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்கிறாள்.
2014 ஆம் ஆண்டில் ராஞ்சனா வெளியான பிறகு இத்திரைப்படத்தின் கரு ராய் மூலம் உருவானது. இவர் சர்மாவுடன் இணைந்து திரைக்கதையை உருவாக்கினார். மனித உணர்ச்சிகளின் சிக்கலான விஷயங்களை, அதிலும் முக்கியமாக காதலை ஆராய்ந்தார். கதைக்கரு, வசனம் மற்றும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் தனுஷை நடிக்க வைப்பது உறுதியானது. ஆனால், மீதமுள்ள நடிகர்கள் தேர்வு இறுதியில் உருவானது. 2020 ஆம் ஆண்டு சனவரியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இடையில் ஆறு மாத படப்பிடிப்பை இழந்த போதிலும், படப்பிடிப்பு செயல்முறை மார்ச் 2020 இல் தொடங்கி மார்ச் 2021க்குள் நிறைவடைந்தது. வாரணாசி, பீகாரின் சில பகுதிகள், டெல்லி, ஆக்ரா, மும்பை, மதுரை, காரைக்குடியில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. இசை மற்றும் ஒலிப்பதிவு ஏ.ஆர்.ரகுமானால் இயற்றப்பட்டது. பாடல் வரிகளை இர்ஷாத் கமில் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றை முறையே பங்கஜ் குமார் மற்றும் ஹேமல் கோத்தாரி ஆகியோர் செய்திருந்தனர்.
தொற்றுநோய் காரணமாக நாடு தழுவிய பொது முடக்கத்தின் விளைவாக, அதன் வெளியீட்டுத் தேதி பல முறை மாற்றியமைக்கப்பட்ட பிறகு, தயாரிப்பாளர்கள் 24 டிசம்பர் 2021 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மூலம் படத்தை வெளியிடத் தீர்மானித்துத் திரையரங்குகளில் வெளியிடுவதைத் தவிர்த்துவிட்டனர். தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[2] இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது, வழக்கத்திற்கு மாறான கதைக்களம், முன்னணி நடிகர்களின் நடிப்பு, இயக்கம், ஒலிப்பதிவு மற்றும் இசை ஆகியவை விமர்சனங்களில் பாராட்டினைப் பெற்றது. ஆனால், ஒட்டுமொத்த கதைக்களத்தின் பொருத்தமற்ற திரைக்கதை மற்றும் வெளிப்பாடு விமர்சத்திற்குள்ளாகியது.