அடி வெட்டல் அல்லது அண்டர்கட் (undercut) என்பது , 1920கள், 1930கள், 1940கள், 2010களில் ஆண்களின் மத்தியில் பெரும்பாலும் நாகரீகமாக நிலவிய ஒரு சிகை அலங்காரம் ஆகும். பொதுவாக இது, தலையின் பக்கவாட்டில் முடியை மழித்து மேல் பகுதியில் மட்டும் நீண்ட முடி வைத்திருப்பது போன்ற தோற்றம் உடையது.[1] இந்த சிகை அலங்காரத்தைக் கோரை முடி, சுருட்டை முடி என எந்த வகையான தலைமுடி கொண்டோரும் முடியைவெட்டி அலங்கரித்துக்கொள்ள இயலும். முக அமைப்புக்கு ஏற்றவாறும் இந்தத் தலை அலங்காரத்தை மாற்றிக்கொள்ளலாம்.[2]
வரலாற்று ரீதியாக, அடிவெட்டு சிகை அலங்காரமானது, வறுமையான மக்களால், வழக்கமான சிகையலங்காரம் செய்யும் திறமையான முடிதிருத்துநர்களிடம் செல்ல இயலாத நிலை கொண்டவர்களால் செய்துகொள்ளப்பட்டது. இவ்வாறு 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து, 1920 கள் வரை இளம் தொழிலாள வர்க்க இளைஞர்களிடையே, குறிப்பாக தெருக் கும்பலைச் சேர்ந்தவர்களின் மத்தியில் பிரபலமாக இருந்தது. கிளாஸ்கோ, நிட்ஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் குழுக்கள் பின் பக்கமும், பக்கவாட்டிலும் மழித்து மேல் பகுதியில் நீண்ட முடியாக வளந்த கூந்தல் சிகையலங்காரத்தை விரும்பினார். தீயினால் ஆபத்து ஏற்படும் நிலை இருந்த போதிலும், இவர்கள் முடியில் மெழுகு கொண்டு சிகையலங்காரம் செய்தனர்.[3] இந்த சிகையலங்காரத்தைக் கண்டு விரும்பிய மான்செஸ்டரின் சூட்கேலர்களாகவும், பர்மிங்ஹாமின் பீக்கி ப்ளைண்டர்ஸ் பகுதிகளைச் சேர்ந்த, மற்ற கும்பல்களும் பின்பற்றின. ஆனால் இந்த நீண்ட முடிகொண்ட சிகையலங்காரமானது தெருச் சண்டைபோடுபவர்களுக்கு சற்று வசதி குறைவாக இருந்தது. [4]
1920 கள் மற்றும் 1930 களின் ஜாஸ் காலகட்டத்தில், இந்த வகை சிகை அலங்காரங்ரமானது முக்கிய பாணியாகக் கருதப்பட்டது.[5] நாசி செர்மனியில், இந்த சிகையலங்காரத்தின் பாதிப்பு கொண்ட சிகையலங்காரமானது நீண்ட காலத்திற்கு இருந்தது, உச்சியில் நீண்ட முடியும் பக்கவாட்டிலும், பின்புறத்திலும் மழித்துக்கொள்ளும் சிகையலங்காரம் வேர்மாக்ட் அதிகாரிகள் மத்தியில் நிலவியது.[6]