அண்ணா சதுக்கம்

அண்ணா நினைவிடம்
மெரினா கடற்கரையில் உள்ள நினைவிட வளாகத்தின் முகப்பு
Map
மாற்றுப் பெயர்கள்அண்ணா நினைவகம்
அண்ணா சதுக்கம்
பொதுவான தகவல்கள்
வகைகல்லறை மற்றும் அருங்காட்சியகம்
முகவரிகாமராஜர் சாலை, மெரினா கடற்கரை
நகரம்சென்னை
நாடுஇந்தியா
அடிக்கல் நாட்டுதல்5 பிப்ரவரி 1969
உரிமையாளர்தமிழ்நாடு அரசு

அண்ணா நினைவிடம், அதிகாரப்பூர்வமாக பேரறிஞர் அண்ணா நினைவிடம், என்பது தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான சி. என். அண்ணாதுரை (அண்ணா) அவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நினைவிடம், அங்கு 5 பிப்ரவரி 1969 அன்று அண்ணாவின் தகனம் செய்யப்பட்ட இடத்தில் கருப்பு பளிங்கு மேடை எழுப்பப்பட்டது. அவர் நினைவிடம், வாள் தூண் மேல் கோள வடிவ டோம் விளக்கு மற்றும் கல் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிட வளாகம் காமராஜர் சாலையில், இந்தியாவின் தமிழ்நாடு, சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா நினைவிடத்தை ஒட்டி அமைந்துள்ளது. 8 ஆகஸ்டு 2018 அன்று, திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் தலைவர் மு. கருணாநிதியின் உடல் அண்ணா சதுக்க வளாகத்திலுள்ள அண்ணா நினைவிடத்தின் பின்புறத்தில் அடக்கம் செய்யப்பட்டது.[1][2]

அறிஞர் அண்னா நினைவிடம்
அண்ணா நினைவிடம்

இவற்றையும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]