அண்ணா நகர்
அண்ணா நகர் என்ற நடுவாங்கரை | |
---|---|
ஆள்கூறுகள்: 13°05′06″N 80°12′36″E / 13.085000°N 80.210100°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
புறநகர் | சென்னை |
வார்டு | 100-120 |
பெயர்ச்சூட்டு | அறிஞர் அண்ணா |
அரசு | |
• ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
• முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
• மாவட்ட ஆட்சியர் | மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 5 km2 (2 sq mi) |
ஏற்றம் | 33 m (108 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600 040 |
வாகனப் பதிவு | TN 02 (சென்னை வட மேற்கு) |
மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை |
சட்டமன்றத் தொகுதி | அண்ணா நகர் |
அண்ணா நகர் (Anna Nagar, முன்பு நடுவாங்கரை என்று அழைக்கப்பட்டது),[3] இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னையின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது மற்றும் அமைந்தகரை வட்டத்திற்கு உட்பட்டது. இது சென்னையில் உள்ள பிரதான குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாகும், மேலும் இங்கு பிரபலமான மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் வசிக்கின்றனர். இங்கு விற்கப்படும் இடங்களின் விலைகள், நகரத்தில் மிக உயர்ந்தவை ஆகும்.
மேற்கு உலகில் பின்பற்றப்பட்ட ஒரு நிலையான முகவரி முறையைப் பின்பற்றிய சென்னையில் முதல் மற்றும் ஒரே நகரம் அண்ணா நகர் ஆகும். உலக வர்த்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக 1968-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அண்ணா நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அண்ணா நகர் கோபுரம் ஆகும். மற்ற முக்கியமான இடங்களில் அண்ணா வளைவு, சிந்தாமணி, ப்ளூ ஸ்டார், சாந்தி காலனி, திருமங்கலம் சந்திப்பு, பாடி சந்திப்பு, அண்ணா நகர் கிழக்கு, மற்றும் அண்ணா நகர் மேற்கு பேருந்து பணிமனை ஆகியவை அடங்கும்.
அண்ணா நகரில் வணிக/வர்த்தக நிறுவனங்களும், கடைகளும், பள்ளிக்கூடங்களும், குடியிருப்புப் பகுதிகளும் மற்றும் ஏராளமான உணவகங்களும் உள்ளன. 2-ஆவது அவென்யூ அண்ணா நகரில் உள்ள ஒரு முக்கிய சாலையாகும், இதில் பல உணவகங்கள் மற்றும் கடைகளுக்கான மையமாக உருவெடுத்துள்ளது.
அண்ணா நகர், நடுவாங்கரை என்ற புறநகர் கிராமமாக உருவானது. 1968 ஆம் ஆண்டில் இப்பகுதியில் நடந்த உலக வர்த்தக கண்காட்சியைத் தொடர்ந்து 1970-களின் முற்பகுதியில் அண்ணா நகரை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உருவாக்கியது. இந்த வாரியம் குடியிருப்பு இடங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அகலமான சாலைகள், பள்ளிகள், பேருந்து நிலையம் மற்றும் பெரிய பூங்காக்களை உருவாக்கியது.
சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. மேலும், அண்ணா நகர் சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ளது.
அண்ணா நகரில் பல முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் அமைந்துள்ளன. சில முக்கியமானவை:
கோயில்கள்: அய்யப்பன் கோயில், சின்ன திருப்பதி, சந்திரமௌலீசுவரர் கோயில், அருள்மிகு தேவி திருமணி அம்மன் கோயில், மாக்காளி அம்மன் கோயில், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், குமாரகோட்டம் ஸ்ரீ பாலமுருகன் கோயில், முல்லை வல்லப விநாயகர் கோயில்.
தேவாலயங்கள்: ஜெருசேலம் மார் தோமா சிரிய தேவாலயம், சி. எஸ். ஐ இம்மானுவேல் தேவாலயம், செயின்ட் லூக்கா தேவாலயம்.
மசூதிகள்:தாக்வா மசூதி, ஜென்னா மசூதி, ஜம்மே மசூதி.
அண்ணா நகர் கோபுர பூங்கா, (அதிகாரப்பூர்வமாக டாக்டர் விஸ்வேஸ்வரர் கோபுர பூங்கா) என்று அழைக்கப்படுகின்ற, இது சென்னையில் உயரமான பூங்காக் கோபுரம் ஆகும். இது 1968 ஆம் ஆண்டில் உலக வர்த்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது. இந்த பூங்கா பி. எஸ். அப்துர் ரகுமான் என்பவரால் கட்டப்பட்டது. இதை முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வி. வி. கிரி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. என். அண்ணாத்துரை முன்னிலையில் துவங்கினார். இந்த கோபுரம், பூங்காவின் மையத்தில் அமைந்துள்ளது, 135-அடி உயரமும், 12-அடுக்கு கோபுரமும் ஆகும். இந்தக் கோபுரத்திற்கு உயரமான சுழல் வளைவு உள்ளது. கோபுரத்திலும் மையத்தில் ஒரு உயர்த்தி உள்ளது. சிலம்பம், கராத்தே, யோகா, பார்கூர் போன்ற பல்வேறு விளையாடல்கள் ஆர்வமுள்ளவர்களுக்கு, இந்தப் பூங்கா பல்வேறு வகையான பொழுதுபோக்குகளை வழங்குகிறது. 62 மில்லியன் டாலர் செலவில் இந்த பூங்கா புதுப்பிக்கப்பட்டு, 2010இல் மீண்டும் திறக்கப்பட்டது.
அண்ணா வளைவு என்று அழைக்கப்படும் ஒரு பெரிய இரட்டை வளைவு, மூன்றாம் அவென்யூவில் அண்ணா நகரின் தெற்குப் பகுதியின் நுழைவாயிலைக் குறிக்கிறது, இது 1985 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியால், ரூ. 1.2 மில்லியன் செலவில், முன்னாள் முதல்வர் சி. என். அண்ணாத்துரையின் பொன்விழா கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டது. அண்ணா நகர் வளரும் பகுதியாக இருந்தபோது, இதை 1986 ஜனவரி 1 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரன் திறந்து வைத்தார். ஒவ்வொரு வளைவும் 52 அடி உயரமும் 82 டன் எடையும் கொண்டது. இந்த வளைவு ஆனது ஒரு முக்கிய அடையாளமாகவும், அண்ணா நகரின் மையமாகவும் உள்ளது.
அண்ணா நகருக்கு இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன, அண்ணா நகர் மேற்கு மற்றும் அண்ணா நகர் கிழக்கு. கிழக்கு நிலையம் அண்ணா நகர் ரவுண்ட்டானா அருகே அமைந்துள்ளது, மேற்கு நிலையம் உள்வட்ட சாலையில் அமைந்துள்ளது. மேற்கு நிலையம் நகரத்தின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். மேற்கு நிலையத்திலிருந்து தொடங்கி நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆட்டோ ரிக்ஷாக்கள், ஷேர் ஆட்டோக்கள் அண்ணா நகரை நகரின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கின்றன.
2 வது அவென்யூ மற்றும் 3 வது அவென்யூ சந்திப்பில் அமைந்துள்ள அண்ணா நகர் ரவுண்ட்டானா, ஒரு வளர்ந்து வரும் உயர் மட்ட வணிக சுற்றுப்புறமாகும். இது ஆரம்பத்தில் 1970-களில் மெட்ராஸ் கண்காட்சிகாக உருவாக்கப்பட்டது மற்றும் அதற்கு "ரவுண்ட் டர்ன் ஓவர்" என்று பெயரிடப்பட்டது, இதன் பெயர் தமிழ் மொழியைப் பயன்படுத்தி "ரவுண்ட்டானா" என்று மாற்றப்பட்டுள்ளது.
அண்ணா நகரில் தொடருந்து நிலையம் 2003இல் திறக்கப்பட்டது. இது வில்லிவாக்கம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. 3.09 கிலோமீட்டர் (1.92 மைல்) தொடருந்து பாதை அண்ணா நகரை திருவள்ளூர் - சென்னை புறநகர் பாதையுடன் இணைக்கிறது. அண்ணா நகருக்கு அருகிலுள்ள மெட்ரோ நிலையம், அண்ணா நகர் மற்றும் அண்ணா நகர் கிழக்கு ஆகிய மெட்ரோ நிலையங்கள் ஆகும்.
2003 மற்றும் 2007 க்கு இடையில், ஐந்து புறநகர் தொடருந்துகள் அண்ணா நகரில் இருந்து வில்லிவாக்கம் வழியாக சென்னைக் கடற்கரைக்கு ஓடின. பாடி சந்திப்பு கட்டுமானத்திற்காக, இந்த நிலையம் 2007இல் மூடப்பட்டது. இருப்பினும், 2009 ஆம் ஆண்டில் சந்தி முடிந்தபின்னர், குறைந்த ஆதரவு காரணமாக நிலையம் மூடப்பட்டது.[4][5]