தனிநபர் தகவல் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | மகாராட்டிரம், இந்தியா | ||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||
நிகழ்வு(கள்) | வில்வித்தை | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
அதிதி கோபிசந்த் சுவாமி மகாராட்டிராவைச் சேர்ந்த ஒரு இந்திய வில்வித்தை வீராங்கனை ஆவார்.[1] இவர் வில்வித்தை உலகக் கோப்பை, உலக வில்வித்தை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கூட்டு வில்வித்தை போட்டியில் பல தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2023 ஆம் ஆண்டில், உலக வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றபோது, மூத்தோர் பிரிவில் இந்தியாவின் முதல் தனிநபர் உலக சாம்பியன் ஆனார். கூட்டுப் பெண்கள் இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் உலகக் கோப்பை சகாப்தத்தில் (2006க்குப் பின்) இளைய உலக சாம்பியனானார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் வென்றார். இவருக்கு 2024 ஆம் ஆண்டில் இந்திய அரசால் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதான அருச்சுனா விருது வழங்கப்பட்டது.
கணித ஆசிரியரான அதிதி சுவாமியின் தந்தை கோபிசந்த், தனது மகளின் பயிற்சிக்கு ஆதரவாக அருகிலுள்ள கிராமத்தில் இருந்து சதாராவுக்கு குடிபெயர்ந்தார்.[2] இவருக்கு 12 வயதாக இருந்தபோது, வில்வித்தை விளையாட்டில் அறிமுகப்படுத்துவதற்காக சதாரா நகரின் ஷாகு அரங்கிற்கு அழைத்துச் சென்றார். அதிதி சுவாமி குழந்தைகள் கால்பந்து விளையாடுவதையும், தடகளத்தில் பயிற்சி செய்வதையும் பார்த்தார் ஆனால் ஒரு மூலையில் ஒரு சிறிய குழுவினர் பயிற்சி செய்து கொண்டிருந்த வில்வித்தையை தேர்வு செய்தார். பின்னர், கரும்பு தோட்டத்தில் பயிற்சியாளர் பிரவின் சாவந்திடம் பயிற்சி பெற்றார்.[2]
அதிதி சுவாமி 2023 ஆம் ஆண்டில் தனது 17வது வயதில் உலக வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றபோது, மூத்தோர் பிரிவில் இந்தியாவின் முதல் தனிநபர் உலக சாம்பியன் ஆனார்.[3][4] கூட்டுப் பெண்கள் இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் உலகக் கோப்பை சகாப்தத்தில் (2006க்குப் பின்) இளைய உலக சாம்பியனானார். ஜோதி சுரேகா மற்றும் பர்னீத் கவுர் ஆகியோருடன் மகளிர் அணி கூட்டு வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.[5][6]
அதிதி சுவாமி 2023 உலக வில்வித்தை இளைஞர் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். 2023 ஆம் ஆண்டில், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 இல் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியின் ஒரு பகுதியாகவும் இருந்தார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் வென்றார்.
அதிதி சுவாமி 9 ஜனவரி 2024 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து அருச்சுனா விருதைப் பெற்றார்.[7]